இமயமலையிலிருந்து ரஜினி ரிட்டர்ன்.. எப்போது அரசியல்.. பதிலளிக்காமல் கிளம்பினார்

இமயமலையில் இருந்து சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இமயமலைக்குப் போயிருந்த ரஜினிகாந்த் சென்னைக்கு வந்து விட்டார். அவரை மொய்த்துக் கொண்ட செய்தியாளர்கள் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் போய் விட்டார்.

ரஜினிகாந்த் அடிக்கடி இமயமலைக்குப் போவது வழக்கம். அங்குள்ள கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிடும் ரஜினிகாந்த், பாபா குகையில் தியானமும் செய்வார்.

rajnikanth returns chennai

இந்த முறையும் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அவர் இமயமலைக்குப் போயிருந்தார். கேதார்நாத் உள்ளிட்ட சில இடங்களுக்குப் போய் சாமி கும்பிட்டார். அங்கும் அவரை ரசிகர்கள் விடவில்லை. கூட நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லி சந்தோஷப்பட்டனர். ரஜினியும் சளைக்காமல் போஸ் கொடுத்தார்.

இந்த நிலையில் தனது இமயமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டார் ரஜினி. தர்பார் படத்தை முடித்துள்ள ரஜினி அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்திற்கு தயாராகப் போகிறார். அவரது அரசியல் பயணம்தான் எப்போது என்று சரியாக தெரியவில்லை. அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பதே ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதைத்தான் சென்னை திரும்பிய ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வியாக கேட்டனர். ஆனால் ரஜினி அது தொடர்பான எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கவில்லை. மாறாக இமயமலை பயணம் நன்றாக இருந்ததாக மட்டும் கூறி விட்டு போயே போய் விட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+