ஒன்றாக வந்த பன்னீரும் பழனியும்.. மாநிலங்களவை தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல்
சென்னை: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களான சி.வி.சண்முகம் மற்றும் ஆர்.தர்மர் ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Recommended Video
தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.
இதில் சட்டப்பேரவையில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் திமுகவுக்கு 4 இடங்களும் அதிமுகவுக்கு 2 இடங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அதிமுக வேட்பாளர்கள்
அதன் அடிப்படையில், அதிமுக வழிகாட்டுக் குழு உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் மற்றும் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக செயலாளரும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும் ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் செயலாளருமான ஆர்.தர்மர் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

வேட்புமனுத் தாக்கல்
இதனை தொடர்ந்து இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இந்த நிகழ்வின்போது அதிமுக மூத்த நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

சி.வி.சண்முகம்
இதில் முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த சி.வி.சண்முகம் 2021 சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தவர். தற்போது எந்த அரசு பதவிகளிலும் இவர் இல்லாத நிலையில், வைத்திலிங்கத்துக்கு முன்பு வழங்கப்பட்டதைபோல் தற்போது சி.வி.சண்முகத்துக்கு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளது அதிமுக.

ஆர்.தர்மர்
மற்றொரு வேட்பாளரான ஆர்.தர்மர் தென் மாவட்டமான ராமநாதபுரத்தை சேர்ந்தவர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவுடன் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்பு மாவட்டச் செயலாளராக பதவி வகித்து இருந்தாலும் தற்போது ஒன்றிய பொறுப்பில் மட்டுமே இருக்கிறார். அதிமுகவில் அதிகம் அறிமுகம் இல்லாத தர்மரை தற்போது இத்தேர்தலில் களமிறக்கியதன் மூலம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பாணி அரசியலை இதில் இபிஎஸ், ஓபிஎஸ் கையில் எடுத்திருப்பது தெரிகிறது.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications