ராஜ்ய சபா தேர்தல்.. திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த ராஜ்ய சபா தேர்தலில் திமுகவுக்கு 4 இடங்கள் கிடைக்க இருந்தது. ஏற்கனவே தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா 1 ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டவிட்ட சூழலில், திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட 10 மாநிலங்களைச் சேர்ந்த 37 ராஜ்ய சபா இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கியது. ராஜ்ய சபா தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

congress

இதன்படி தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. மாநிலங்களவை எம்பி-க்களாக இருக்கும் திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்ஆர் இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், ஜிகே வாசன், தம்பிதுரை ஆகியோரின் பதவிக் காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், மாநிலங்களவை தேர்தல் வந்திருப்பது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் புதிய சவாலை கொடுத்தது. ராஜ்ய சபா தேர்தலை பொறுத்தவரை திமுகவுக்கு 4 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும். நேற்றிரவே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட்டை திமுக தலைமை ஒதுக்கி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

அதேபோல் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 2 இடங்களுக்கான திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டம்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியிடம் ராஜ்ய சபா வேட்பாளரை கடைசி நேரத்தில அறிவிக்காமல், விரைவாக அறிவிக்க வேண்டும் என்று திமுக தலைமை கேட்டுக் கொண்டது. இதனால் இன்று இரவு அல்லது நாளை காலையில் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+