Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெற்றிலை பாக்கு மாத்தியாச்சு.. தேதி பின்னர் அறிவிக்கப்படும்: "ராஜ்யசபா சீட்” உறுதியாக சொன்ன பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை அதிமுக ஒதுக்கி இருப்பதாக உறுதி செய்துள்ளார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. அதன்படி, அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய 5 சீட்கள் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Rajya sabha seat for DMDK confirms Premalatha vijayakanth

ராஜ்யசபா சீட்: தேமுதிக தரப்பில், ராஜ்யசபா சீட் கேட்டு அதிமுகவிடம் தொடர்ர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. நேற்று பிரேமலதாவின் சகோதரர் எல்.கே சுதீஷ், எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கே சென்று இதுபற்றி பேசியிருந்தார். ஆனால், ராஜ்யசபா சீட் குறித்து எந்தவொரு தகவலும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேமுதிக தலைமை அலுவலகத்திற்குச் சென்றார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குச் சென்ற எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

பிரேமலதா - ராஜ்யசபா சீட்: அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த். பிரேமலதா விஜயகாந்த்திடம், ராஜ்யசபா சீட் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, அதற்கு சூசகமாக பதில் அளித்தார் பிரேமலதா. பிரேமலதா பேசுகையில், "வெற்றிலை பாக்கு மாற்றி உறுதி செய்துவிட்டோம், தேதி மட்டும் பின்னர் அறிவிக்கப்படும். அதுவரை பொறுமை காக்க வேண்டும். வெகு விரைவில் அறிவிப்போம்.

பத்திரிகையாளர்களுக்கு எல்லாமே உடனே சொல்லிவிட வேண்டும்.. ஏன் அவசரம்? ராஜ்யசபா எம்.பி சீட் உறுதி என்பதைச் சொல்லிவிட்டேன். ராஜ்யசபா எம்.பி ஆகப்போவது யார் என்பது அறிவிக்கப்படும். தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்." என்றார்.

ஒப்புக்கொண்ட எடப்பாடி: தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டு உள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த ஆண்டு, அதாவது 2025ஆம் ஆண்டில் இல்லாமல், 2026ஆம் ஆண்டில் காலியாகும் ராஜ்யசபா எம்.பி சீட்டுக்கான இடம் ஒன்று அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

தேமுதிக - அதிமுக கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் நேற்று தெரிவித்திருந்தார். 2026 சட்டசபை தேர்தல் வரை இந்தக் கூட்டணியை உறுதி செய்துள்ளதாகவும், அதன்படியே, அதிமுக சார்பில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரபரக்கின்றன.

எல்.கே.சுதீஷுக்கு வாய்ப்பு: தேமுதிகவில் இருந்து இதுவரை யாரும் நாடாளுமன்றம் சென்றதில்லை. இந்நிலையில், ராஜ்யசபா சீட்டை உறுதி செய்துள்ளது தேமுதிக. பிரேமலதாவின் சகோதரர் எல்.கே சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆக்கப்படலாம் எனத் தெரிகிறது. சுதீஷ் போட்டியிட விரும்பிய கள்ளக்குறிச்சி தொகுதி இந்த முறை தேமுதிகவுக்கு ஒதுக்கப்படவில்லை. இதன் மூலம், சுதீஷ் ராஜ்யசபா எம்.பி ஆவது உறுதி என்ற தகவல்கள் பரபரக்கின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+