Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேமுதிகவுக்கு ‘கிரீன்’ சிக்னல் கிடைக்கல.. சுதீஷிடம் எடப்பாடி சொன்ன வார்த்தை.. அதிர்ந்து போன பிரேமலதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வெளியிடப்படாததால் குழப்பம் நீடிக்கிறது. தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் அண்மையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசி இருந்தார். இந்தச் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி சுதீஷிடம் பேசியது என்ன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டில் சென்று, தேமுதிக பொருளாளர் சதீஷ் அவரை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது தங்களுக்கு ஒரு ராஜ்யசபா தொகுதி வழங்க வேண்டும் என்றும், அதன் பிறகு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புவதாகவும் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

Rajya Sabha Seat Uncertainty Continues for DMDK Details Emerge on EPS Sudhish Meeting

தமிழ்நாட்டின் 6 மாநிலங்களவை எம்.பி இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 4 வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதிமுகவின் 2 மாநிலங்களவை வேட்பாளர்கள் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்னும் அறிவிப்பு வெளியிடவில்லை.

2024 மக்களவைத் தேர்தலின் போது தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி இடம் தருவதாக அதிமுக உறுதியளித்தது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார். ஆனால் அப்படி எல்லாம் எந்த உறுதியும் தரப்படவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட் தருவது அதிமுகவின் கடமை எனவும், எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும் என்றும் பிரேமலதா வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து, தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் உறுதி என ஒரு தகவல் பரவியது. அதேசமயம், இந்த சந்திப்புக்குப் பிறகு சுதீஷ், செய்தியாளர்களைச் சந்திக்காமல் அங்கிருந்து புறப்பட்டார். சென்னையில் நேற்று செய்தியாளர்கள் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியும் எந்த பதிலும் சொல்லாமல் நழுவினார்.

இந்தச் சூழலில் தான் எடப்பாடி பழனிசாமி - சுதீஷ் சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த லோக்சபா தேர்தலின்போது சொன்னபடி, எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டை கொடுக்க வேண்டும் என சுதீஷ், எடப்பாடி பழனிசாமியிடம் கூறியுள்ளார்.

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருகிறோம் எனச் சொன்னது உண்மை தான். மக்களவைத் தேர்தலில் நாங்கள் சில சீட்கள் வெற்றி பெற்றிருந்தால் இப்போது ராஜ்யசபா சீட்டை உங்களுக்குத் தருவதில் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால், மக்களவையில் அதிமுக எண்ணிக்கையே இப்போது பூஜ்ஜியமாக உள்ளது.

லோக்சபாவில் அதிமுகவுக்கு எம்.பிக்களே இல்லை. ராஜ்யசபாவில் மட்டுமே குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறோம். பல சீனியர்கள் சீட் கேட்டு வருகின்றனர். இப்படியான சூழலில் உங்களுக்குத் தர முடியாத நிலையில் இருக்கிறோம். அடுத்த முறை நிச்சயமாக ராஜ்யசபா சீட் தருகிறோம்" எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சுதீஷ், "எப்படியாவது எங்களுக்கு ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும். எங்கள் கட்சித் தொண்டர்களுக்கு ஒரு நம்பிக்கை தேவை. அப்போதுதான் வரும் தேர்தலில் சிறப்பாகச் செயல்பட முடியும். கட்சியினரை உற்சாகமூட்டுவதற்கு இந்த சீட்டை அவசியம் தர வேண்டும்" என அழுத்தமாக வலியுறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டாராம். இந்த விஷயத்தை பிரேமலதாவிடம் கூறியதும், ஓரிரு நாட்கள் பார்ப்போம். அதன்பிறகு அடுத்தகட்ட முடிவை எடுக்கலாம் எனத் தெரிவித்தாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+