‘Thug life’ தடை என்பது 'புது வகை போக்கிரித்தனம்'.. கமலுக்காக வந்த ராம் கோபால் வர்மா.. உடனே டெலிட்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல் 'தக் லைஃப்' வெளியிடப்படாது என்று கன்னட அமைப்புகளும், கர்நாடகா வர்த்தக சபையும் அதிரடியாக எச்சரித்துள்ளன. கமல்ஹாசன் மன்னிப்புகேட்க முடியாது என்று மறுத்ததுடன் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனுக்கு ராம் கோபால் வர்மா ஆதரவு தெரிவித்துள்ளார் 'தக் லைஃப்' தடை என்பது புதிய வகையான போக்கிரித்தனம் என்று கூறினார். ஆனால் போஸ்டை உடனே செய்துவிட்டார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதில், நடிகர் சிம்பு, நடிகை திரிஷா உள்பட பல முன்னணி திரை நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற 5-ந்தேதி இந்தியா முழுவதும் வெளியாக உள்ளது. பல நாடுகளில் தியேட்டர்களில் வெளியாகிறது.

அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்ததாக குறிப்பிட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமாரை தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் போன்றவர் என்று குறிப்பிடும் நோக்கில் அப்படி கூறியிருந்தார் என கூறப்படுகிறது.
எனினும் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூறிய கமலின் பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கமல்ஹாசன் ஒன்றும் மொழி ஆராய்ச்சியாளர் இல்லை என்றும், இப்படியான ஒரு கருத்தை எப்படி கமல்ஹாசன் கூறலாம் என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அத்துடன் கன்னட மொழியை கமல்ஹசான் அவமதித்துவிட்டதாக கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றன. மேலும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் கர்நாடகத்தில் கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தை திரையிடமாட்டோம் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. இதே கருத்தை கர்நாடகத்தில் தக் லைப் படத்தை வெளியிட உரிமை பெற்ற வினியோகஸ்தரும் கூறியிருந்தார்.
ஆனால் கமல்ஹாசன், இந்த விவகாரத்தில் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், அன்பின் வழியில் கூறியதும் என்றும் இதை கண்டித்தும் கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கன்னட திரைப்பட வர்த்தகசபை தலைவர் எம்.நரசிம்மலு, "கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட மாட்டோம்" என்று திட்டவட்டமாக கூறினார்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கன்னடம் பற்றி கமல்ஹாசன் கூறிய கருத்துக்காக கர்நாடக மக்கள் அவர் மீது கோபத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர் நடித்துள்ள 'தக் லைப்' படத்தை கர்நாடகத்தில் திரையிட மாட்டோம் என முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் எழுதி இருக்கிறோம் என்றார்.
இதையடுத்து 'தக் லைஃப்' திரைப்படத்தை கர்நாடகாவில் சுமூகமாக வெளியிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அதற்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கோரி நடிகர் கமல்ஹாசன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 'தக் லைஃப்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரான கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் சார்பில், பாதுகாப்பு கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
அதேநேரம் இதுபற்றி கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் எம். நரசிம்மலு மீண்டும் பேசுகையில், ஊடகங்களில் செய்தி வெளியான பிறகுதான் கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுவது குறித்து தங்களுக்குத் தெரியும். நாங்கள் எங்கள் சட்டக் குழுவுடனும் பேசவிருக்கிறோம். இது வெறும் திரைப்படத் துறை பிரச்சினை அல்ல; இது ஒரு மாநில மற்றும் மொழிப் பிரச்சினையாக மாறி இருக்கிறது.
இது தொடர்பாக அரசிடம் இருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. எனவே கன்னட ஆதரவு அமைப்புகள், அரசியல்வாதிகள் மற்றும் மாநில மக்கள் உட்பட அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். அவர்கள் கர்நாடாவின் உயர்நீதிமன்றத்திற்கு செல்லட்டும். நாங்கள் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை. இங்கே, எங்கள் திரையரங்குகள் எதுவும் 'தக் லைஃப்' படத்தை திரையிடாது என்றார். இதனால் 'தக் லைப்' படம் திட்டமிட்டப்படி வருகிற 5-ந்தேதி கர்நாடகத்தில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
'தக் லைஃப்' படத்தை வெளியிட விதிக்கப்பட்டதடைக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்திய பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா, கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்தார். ராம்கோபால் வர்மா வெளியிட்ட பதிவில், "ஜனநாயகத்தின் புதிய பெயர் சகிப்புத்தன்மையற்ற தன்மை" என்று விமர்சித்த அவர், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் 'தக் லைஃப்' படத்தை தடை செய்வதாக அச்சுறுத்துவது ஒரு புதிய வகையான போக்கிரித்தனத்திற்கு சமம்" என்று விமர்சித்தார். ஆனால் இந்த பதிவு சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications