மதுராந்தகம் ஏரி காத்த ராமர்.. நேரில் காட்சி தந்த கடவுள்.. கல்வெட்டு சாட்சி.. சிலிர்க்கும் அனுபவம்
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. அயோத்தி சென்று ராமரை வணங்க முடியவில்லை என்று பலருக்கும் ஏக்கம் இருக்கும். தமிழ்நாட்டில் ராமர் பாதம் பட்ட இடங்கள் உள்ளன. சிறப்பு வாய்ந்த ராமர் ஆலயங்களும் உள்ளன. ராமர் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த ராமர் ஆலயங்களைப் பற்றி வரிசையாக பார்க்கலாம்.
மதுராந்தகம் ஏரி காத்த ராமர்: செங்கல்பட்டில் இருந்து மேல்மருவத்தூர் செல்லும் சாலையில் உள்ளது மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோவில். பெரும் வெள்ளத்திலிருந்து ஒரு ஊரையே காத்த ராமருக்கு ஒரு ஆங்கிலேய கலெக்டர் எழுப்பிய கோவில்தான் ஏரி காத்த ராமர் கோவில். சென்னை - திண்டிவனம் நெடுஞ்சாலையில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது ஏரிகாத்த ராமர் கோயில். இங்கு உள்ள இறைவனின் திருப்பெயர் கோதண்டராமன். அவரைத்தான் 'ஏரிகாத்த ராமர்' என்று அழைக்கிறார்கள். இறைவியின் திருப்பெயர் ஜனகவல்லித் தாயார்.

ராமரின் தரிசனம்: சீதையை மீட்க செல்லும் வழியில், ராமபிரான் விபண்டக மகரிஷி ஆசிரமத்தில் தங்கி, அவர் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு, அவரது வேண்டுதலுக்கேற்ப அயோத்தி திரும்பும் வழியில் சீதையுடன் திருமண கோலத்தில் இங்கு காட்சி தந்தார். அதன் அடிப்படையில் புஷ்பக விமானத்துடன் கோதண்ட ராமர் கோவில் அங்கே அமைக்கப்பட்டது.
கல்வெட்டு சாட்சி: பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது ஏரி நிரம்பி உடைந்து விடாமல் இருக்க ராமபிரானே தன் தம்பி லட்சுமணனுடன் ஏரியை காத்து நின்றார் என்கிறது தல புராணம். சம்பவங்கள் இன்று அந்த ஆலயத்தின் கல்வெட்டிலும் உள்ளது. "இந்த தர்மம் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது" என்ற வாசகத்தை இன்றும் அந்தக் கல்வெட்டில் காணலாம். இது 1825-ம் ஆண்டில் கிழக்கு இந்திய கம்பெனியின் செங்கல்பட்டு கலெக்டராக இருந்த கர்னல் லியோனல் பிளேஸ் என்பவருக்கு நடந்தது. சென்னை-திருச்சி ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 28 கி.மீ. தொலைவில் ஏரி காத்த ராமர் கோவில் உள்ளது
திருநின்றவூர்: ஏரி காத்த ராமர் கோவில் திருநின்றவூரில் உள்ள சிறப்பு வாய்ந்த கோவில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்து அரசனான ராஜசிம்மவர்மன் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலில் மூலவரான ஸ்ரீராமர் 8 அடி உயரத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீராமருடன் வலது கையில் வில்லை ஏந்தியபடி லக்ஷ்மணரும், சீதையின் கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் காட்சி தருகின்றனர்.
அத்தி மர சிலைகள்: இந்த விக்ரகங்கள் அனைத்தும் அத்தி மரத்தால் செய்யப்பட்டவை. ஆனால் பார்ப்பதற்குக் கல்லில் வடித்த சிலை போன்ற பிரம்மாண்ட வடிவத்தில் மூவரும் வீற்றிருக்கின்றனர். முன்னொரு காலத்தில் பெரு மழையால் திருநின்றவூர் ஏரி உடைந்து ஊரே அழியக்கூடிய நிலை இருந்ததாகவும், மதுராந்தகம் போல பகவான் ராமரை வேண்டினால் திருநின்றவூரை காப்பார் என்று முன்னோர்கள் சொன்னதை கேட்டு மாவட்ட ஆட்சியர் வேண்டினாராம்.
ராமர் ஆலய தரிசனம்: பக்தர்கள் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட ஸ்ரீராமர், தனது அம்புகளால் ஏரியின் கரை உடையாமல் காத்தருளியதாகவும், அதனால்தான் ராமபிரான் ஏரி காத்த ராமர் என்று அழைக்கப்படுவதாகவும் தல வரலாறு கூறுகிறது. இந்த கோவிலில் ஆஞ்சநேயரின் பின்புறம் ராம லக்ஷ்மரின் பாத தரிசனத்தையும் காண முடிகிறது. ஏரி காத்து ராமரை வழிபடுபவர்களுக்குக் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கோயிலின் பின்புறம் வருண புஷ்கரணியும் அதன் நடுவே தீர்த்தவாரி மண்டபமும் அழகுற அமைந்துள்ளது. அயோத்தி சென்று பால ராமரை தரிசனம் செய்ய முடியவில்லையே என்ற கவலை வேண்டாம். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் வசிப்பவர்கள் ஏரிகாத்த ராமரை தரிசனம் செய்யலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications