ராமதாஸை நேரில் சந்திக்கும் விஜய்.. தவெக அணியில் இணைய வாய்ப்பு.. சொல்வது பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டு வருவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார். அன்புமணி அதிமுக உடனான கூட்டணியில் இணைந்துவிட்ட நிலையில், ராமதாஸ் முடிவு என்னவாக இருக்கும் என்பது தொடர்பாகவும் தராசு ஷ்யாம் கூறியுள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக அன்புமணி தரப்பு இணைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்க எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

Ramadoss alliance

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பேசுகையில், அன்புமணி தலைமையிலான பாமக மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம். எது எப்படி இருந்தாலும், ராமதாஸ் ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. நேற்று வரைக்கும் கூட ராமதாஸ் தரப்புடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

ஆனால் இப்படியான முடிவு எட்டப்பட உள்ளதை ராமதாஸிடம் அதிமுக சொல்லவில்லை. அதனால் இந்த முடிவு ராமதாஸ்க்கு அதிர்ச்சியாகவே இருக்கும். இதனால் அதிமுக, பாஜக, பாமக மற்றும் புதிய தமிழகம், ஜான் பாண்டியன், தமாகா உள்ளிட்ட கட்சிகள் இணையலாம். இதில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் நிலைமை மட்டும் என்னவென்று தெரியவில்லை.

அதேபோல் ராமதாஸ் நிலைப்பாடு தான் குழப்பமானது. அன்புமணி பக்கம் பெரும்பாலான பாமக நிர்வாகிகள் இருக்கிறார்கள். பாஜக தயவால் மாம்பழ சின்னம் அன்புமணிக்கு கிடைக்கலாம். ராமதாஸால் திமுக அணிக்கு செல்ல முடியுமா என்பது சந்தேகம் தான். அதனால் ராமதாஸ் தரப்பு தவெகவுடன் செல்ல வாய்ப்புகள் உள்ளது.

விஜய் நேரடியாக ராமதாஸை சந்திக்க உள்ளதாக நீண்ட நாட்களாக பேசப்பட்டு வருகிறது. விஜய் தைலாபுரம் சென்று ராமதாஸிடம் ஆசி பெற்றால், மிகப்பெரிய மைலேஜ் தான். அதேபோல் விஜய்க்கும் தலித் வாக்கு வங்கி அதிகரித்து வருகிறது. இதனால் ஜனவரி மாத இறுதிக்குள் தமிழக அரசியலில் கூட்டணி விவகாரம் இறுதியாகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+