சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இவரை போன்றவர்கள் இருக்கும் போதும் இந்தியா முன்னேறாதது பெரும் சோகம்- ராமதாஸ் கிண்டல்

Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திர பல்கலைக்கழக துணை வேந்தர் நாகேஸ்வர ராவ் ஆகியோர் இருந்தும் இந்தியா முன்னேறாதது தான் பெரும் சோகமாக உள்ளது என பாமத நிறுவனர் ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் டுவிட்டரை நல்லபடியாக பயன்படுத்தி வருகிறார். அரசியல்வாதிகள் கூறும் கூற்றுக்கு அப்படியே நாசுக்காகவும் சூடு போட்டது போன்றும் பதிலை கொடுப்பார். அவர் கூறும் பதில்கள் பல சிந்தனைக்குள்பட்டதாக இருக்கும்.

டுவிட்டர் பக்கத்தில்...

டுவிட்டர் பக்கத்தில்...

தமிழக அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சனம் செய்து வருகிறார் ராமதாஸ். இன்றைய டுவிட்டர் பக்கத்தில் ஆந்திர தொடங்கி அப்படியே தமிழகம் வழியாக டெல்லியை பிடித்துள்ளார்.

முன்னேறாதது ஏன்

இதுகுறித்து ராமதாஸ் தனது அடுத்தடுத்த டுவீட்களில் கூறுகையில் மகாபாரத கவுரவர்கள் சோதனைகுழாய் குழந்தைகள். இராமாயணப் போரில் 24 போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன: ஆந்திர பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ்-நாடி, நரம்பெல்லாம் அறிவியலும், வரலாறும் பின்னிப் பிணைந்துள்ள இவரைப் போன்றவர்கள் இருக்கும் போதும் இந்தியா முன்னேறாதது தான் பெரும் சோகம்! என்றார்.

சிறப்பு

மற்றொரு டுவீட்டில் தேசிய மொழியாக அறிவிப்பதற்கான தகுதிகளை இந்தி பெற்று விட்டது: சுஷ்மா சுவராஜ் - அப்படியா... வடபுலத்து மக்களால் பேசப்படுகிறது என்பதைத் தவிர வேறு என்ன தகுதி இந்திக்கு உள்ளது. எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் தனிச் சிறப்புகள் உள்ளன. அவையும் தேசிய மொழிகளாக வேண்டும்! என்றார்.

எதிர்க்கட்சித் தலைவர்

‘‘ தமிழகத்தில் தொழில் தொடங்கும் போது தமிழக இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக பன்னாட்டு நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், அப்படி தருவதில்லை. இது உங்கள் ஆட்சியில் மட்டுமல்ல... எங்கள் ஆட்சியிலும் இது தான் நிலைமை!'' - துரைமுருகன், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் என்றார் ராமதாஸ்.

English summary
PMK Ramadoss criticises Andhra University's Vice Chancellor in the Gaurav's comment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X