Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காந்திமதியை வைத்து புது கணக்கு போடும் ராமதாஸ்! 2026ல் களம் காணும் தொகுதி இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் தருமபுரி தொகுதியில் மகள் காந்திமதியை பாமக நிறுவனர் ராமதாஸ் போட்டியிட வைக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரியில் அன்புமணி மனைவி சவுமியா போட்டியிட்டு 2ஆம் இடத்தை பிடித்திருந்தார்.

பாமக செயல் தலைவராக மகள் காந்திமதியை, நியமித்த பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காந்திமதி, தனக்கும் கட்சிக்கும் பாதுகாப்பாக இருப்பார் என ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

ramadoss pmk dharmapuri

அது போல் காந்திமதியும், ராமதாஸ் இட்ட கட்டளைகளை செய்து கட்சியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என குறிப்பிட்டிருந்தார். அன்புமணிக்குத்தான் செயல் தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

அன்புமணி நீக்கம்

இதையடுத்து அன்புமணி ராமதாஸை, ராமதாஸ் கட்சியை விட்டே நீக்கிவிட்டார். மேலும் அன்புமணிக்கும் பாமகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறிவிட்டார். வேண்டுமானால் அவர் புதிய கட்சியை ஆரம்பித்து போட்டியிட்டு காட்டட்டும் என ராமதாஸ் கூறிவிட்டார்.

6 மாதங்களில் எப்படி

இந்த நிலையில் பாமகவில் உள்ள உள்கட்சி பிரச்சனை 6 மாதங்களில் சரியாகும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் தனது கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் ராமதாஸோ அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்.

கூட்டணி பேச்சு யாருடன்

இதனால் கூட்டணி அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதுபோல் கூட்டணி பேச்சுவார்த்தையையை யாரிடம் தொடங்குவது என்ற குழப்பமும் கட்சிகளுக்கு எழுந்துள்ளது. பீகார் SIR தொடர்பாக நேற்று நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு கூட ராமதாஸை தொடர்பு கொண்டு, "பாமக சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு தமிழக அரசு தெரிவித்ததாம்.

நெருங்கும் தேர்தல்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாமக இப்படி பிரிந்து கிடப்பது குறித்து தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர். இந்த நிலையில் அரசியலில் அன்புமணிக்கு மாற்றாக காந்திமதியை ஒரு மாபெரும் சக்தியாக மாற்ற வேண்டும் என ராமதாஸ் விரும்புகிறாராம்.

காந்திமதியை முன்னிலைப்படுத்த..

தனக்கு வயதாகிவிட்ட காரணத்தால் கட்சியை பொறுப்போடும் கட்சி நிர்வாகிகளை தாய் என்ற அரவணைப்போடும் பார்த்து கொள்வதை காந்திமதி செய்வார் என ராமதாஸ் நம்புகிறாராம். இதனால் அவருக்கு தேர்தல் அரசியலில் வாய்ப்பு கொடுத்து அழகு பார்க்க நினைக்கிறாராம்.

தருமபுரி மாவட்டத்தில் ஒரு தொகுதி

பாமகவுக்கு தருமபுரி மாவட்டங்களிலும் வட தமிழக மாவட்டங்களிலும் அதிக செல்வாக்கு உள்ளது. அதிலும் தருமபுரியில் உள்ள கிராமங்களில் இன்று வரை ராமதாஸுக்கு நல்ல மரியாதையும் ஆதரவும் இருக்கிறதாம். இது கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த ராமதாஸ் பேத்திகளே வெளிப்படுத்தியிருந்தார்.

ராமதாஸ் விருப்பம்

எனவே தனது மகள் காந்திமதியை தருமபுரி மாவட்டத்தில் வலுவாக உள்ள ஒரு தொகுதியில் களம் காண வைத்து வெற்றி பெற வைக்க ராமதாஸ் விரும்புகிறாராம். இதற்காக தான் செல்லவுள்ள கூட்டணியை மிகவும் கவனமாக தேர்வு செய்ய விரும்புகிறாராம்.

அன்புமணியால் விரக்தி

ஏற்கெனவே அன்புமணி பிளவால் தொண்டர்கள் கவலையில் இருக்கும் நிலையில் காந்திமதியின் தேர்தல் அரசியல் பயணம் தோல்வியுற்றால் அவருக்கு கட்சியில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆதரவும் பறிபோய்விடும் என்பதால் தருமபுரியில் மகளை களம் இறக்க திட்டமிட்டுள்ளாராம்.

காந்திமதி எப்படி செயல்படுவார்

இது குறித்து தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகளிடம் ராமதாஸ் பேசி வருவதாக தகவல்கள் கிடைத்தன. எனவே வரும் தேர்தலில் காந்திமதியின் செயல்பாடுகள் எப்படியிருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+