“சூரியனையும் சொந்தமாக்கிக்கொள்வோம்!” ஆதித்யா எல் 1 வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ராமதாஸ் வாழ்த்து
சென்னை: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் halo ஆர்பிட்டில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு காரணமான இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
சூரிய குடும்பத்தில் மொத்தம் 8 கோள்கள் இருக்கின்றன. இதில் 4 கோள்களில் மட்டும்தான் தரை பரப்பு இருக்கிறது. அதிலும் பூமியில் மட்டும்தான் வளி மண்டலம் இருக்கிறது. வளி மண்டலம் இருக்கும் கோள்களில்தான் உயிர்கள் வாழ முடியும். புதன் கிரகத்தை எடுத்துக்கொண்டால் அங்கு சுத்தமாக வளிமண்டலம் இல்லை. காரணம் சூரியனிலிருந்து வெளிவந்த சக்திவாய்ந்த கதிர்கள்தான். இந்த கதிர்கள் புதனின் வளி மண்டலத்தை வழித்து எடுத்துவிட்டது.

இரண்டாவதாக உள்ள வெள்ளி கிரகத்தில் அடர்த்தியான வளிமண்டலம் இருக்கிறது. ஆனால் அழுத்தம் அதிகம். எனவே உயிர்கள் வாழ முடியாது. செவ்வாய் கிரகத்திலும் ஒரு காலத்தில் வளிமண்டலம் இருந்திருக்கிறது. ஆனால் அந்த கிரகத்தின் கருவில் இருந்த லாவா போன்ற நெருப்பு குழம்பு முழுவதுமாக கெட்டியாகிவிட்டது. எனவே காந்த சக்தியை இந்த கிரகம் இழந்துவிட்டது. இதனால் சூரியனிலிருந்து வெளி வரும் கதிர் செவ்வாயின் வளி மண்டலத்தை முழுவதுமாக அழித்துவிட்டது.
பூமியின் அடியில் இன்னும் நெருப்பு குழம்பு இருக்கிறது. இது காந்த சக்தியை வெளிப்படுத்தி வருகிறது. அதனால்தான், ஒரு காந்தத்தை எடுத்து தொங்கவிட்டால் அதன் ஒரு முனை சரியாக வடக்கையும், மற்றொரு முனை தெற்கு திசையையும் காட்டுகிறது. இந்த காந்த சக்தி வளி மண்டலத்தை அழியாமல் காத்திருக்கிறது. என்னதான் காந்த சக்தி நமக்கு பாதுகாப்பானதாக இருந்தாலும், சூரியனின் கதிர்கள் அதிக அளவுக்கு பூமியை தாக்கினால் அதை சமாளிப்பது கடினம். எனவே இப்படி ஒரு ஆபத்து குறித்து முன்கூட்டியே தெரிந்துக்கொள்ளதான் நாம் ஆதித்யா எல்-1 விண்கலத்தை அனுப்பியுள்ளோம்.

இந்த விண்கலம் இன்று வெற்றிகரமாக எல்1 புள்ளியில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து x சோஷியல் மீடியா தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,
"சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து கடந்த செப்டம்பர் 2-ஆம் நாள் பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் 125 நாள் பயணத்திற்குப் பிறகு, பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல் 1 புள்ளியை அடைந்து ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் விண்வெளி ஆய்வு பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இதற்கு காரணமான இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் என வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவை வென்ற நமது அறிவியலாளர்கள் இப்போது ஆதித்யா எல் 1 திட்டத்தின் மூலம் சூரியனை நெருங்கியுள்ளனர். சூரியன் குறித்த உண்மைகளும் இனி நமக்கு புலப்படும். வானத்தையும், நிலவையும் வசப்படுத்திய நாம், இனி சூரியனையும் சொந்தமாக்கிக் கொள்வோம். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனைகள் தொடர மீண்டும் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications