மருமகள் சவுமியாவுக்கு எதிராக வேட்பாளரை அறிவித்த ராமதாஸ்.. வெளியானது 2வது கட்ட வேட்பாளர் பட்டியல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தனது அணியின் சார்பில் 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். தர்மபுரி உள்பட மொத்தம் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டன. அதில் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா போட்டியிடும் தர்மபுரி தொகுதியில் மாவட்ட செயலாளர் சரவணனையை நிறுத்தி உள்ளார்.

தமிழகத்தில், பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் நிறுவனரான ராமதாஸ்க்கும், மாநில தலைவரான மகன் அன்புமணி ராமதாஸ்-க்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

ramadoss-released-his-pmk-2nd-candidates-list-and-sarvanan-contest-against-sowmya-anbumani-in-dharma

இதனால், இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். பாமகவின் அன்புமணி ராமதாஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அந்த கூட்டணியில் பாமகவிற்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

ராமதாஸ் 2வது வேட்பாளர் பட்டியல்

திமுக, அதிமுக, தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி வைப்பார்? என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை. மாறாக சசிகலா புதிதாக தொடங்கிய அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்நிலையில் தான் ராமதாஸ் தனது 2வது கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டார். இந்த 2வது கட்ட வேட்பாளர் பட்டியலில் மொத்தம் 10 தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

திருப்போரூர் - திருவள்ளூர்

* திருப்போரூர் - என்எஸ் ஏகாம்பரம்
* உத்திரமேரூர் - ஸ்ரீதர்
* கும்மிடிப்பூண்டி - எஸ்டிகே சங்கர்
* திருவள்ளூர் - வெங்கடேசன்
* செய்யாறு - சீனிவாசன்

அந்தியூர் - தர்மபுரி

* அந்தியூர் - எஸ்சிஆர் கோபால்
* புவனகிரி - எம்ஆர் பாலமுருகன்
* செஞ்சி - கனல் பெருமாள்
*ஜெயங்கொண்டம் - காடுவெட்டி ரவி
* தர்மபுரி - சரவணன் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சவுமியாவை எதிர்த்து வேட்பாளர்

இதில் தர்மபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸின் பாமக சார்பில் அவரது மனைவியும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இந்நிலையில் தான் மருமகளை எதிர்த்து சரவணன் என்பவரை ராமதாஸ் வேட்பாளராக அறிவித்துள்ளார். இவர் அந்த மாவட்டத்தின் மாவட்ட செயலாளராக உள்ளார். இதன்மூலம் ராமதாஸ் - அன்புமணி இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருவது உறுதியாகி உள்ளது.

முதற்கட்ட பட்டியலில் யார் யார்?

முன்னதாக நேற்றைய தினம் ராமதாஸ் தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அப்போது 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்தார். அப்போது சேலம் மேற்கு தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏ அருள், வந்தாவாசி தொகுதிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் முரளிசங்கர், கும்பகோணம் தொகுதிக்கு ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ஸ்டாலின் விருத்தாச்சலம் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், மயிலாடுதுறை தொகுதிக்கு பாக்கம் சக்திவேல் உள்ளிட்டவர்கள் போட்டியிடுவதாக அறிவித்தார். நேற்று 5 தொகுதி இன்று 10 தொகுதிகள் என்று மொத்தமாக ராமதாஸ் தனது அணி சார்பில் 15 வேட்பாளர்களை களமிறக்கி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+