Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமரம், தென்னை மரம் தான் எங்களுக்கு சோறு போடுது! மரம் வளர்ப்பு பற்றி ராமதாஸ் ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாமரம், தென்னை மரம் தான் தங்களுக்கு சோறு போடுவதாகவும் வட்டார அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றத் தொடங்கிய காலத்திலேயே மரம் வளர்ப்பில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

பொதுவாக அரசியல் கட்சி தலைவர்கள் என்றாலே அவர்கள் சென்னையில் தான் வசிப்பார்கள். ஆனால் ராமதாஸ் அதில் விதிவிலக்காக சொந்த மண்ணிலேயே தங்கி கட்சியை வழிநடத்தி வருகிறார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்வியல் முறைகளை பின்பற்றி வரும் அவர், தனது தோட்டத்தில் வளர்க்காத மரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மரங்களை வளர்த்து வருகிறார்.

Ramadoss says Mango and coconut trees give me revenue

எந்த ஊருக்கு சென்றாலும் வீடு திரும்பும் போது புதிதாக ஒரு மரக்கன்றையாவது வாங்கி வந்து நடவு செய்து அதனை வளர்ப்பார். இந்த தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். அதேபோல் விழுப்புரம் மாவட்டம் கோனேரிக்குப்பத்தில் உள்ள சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் 4,200 மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்த்து வருகிறார் ராமதாஸ். தாம் குடியிருக்கும் தோட்டத்தை வீட்டைச் சுற்றி பசுமைக் கானகமாகவும், மலர்ச் சோலையாகவும் மாற்றி வைத்திருக்கிறார் ராமதாஸ்.

மகன், மகள்கள், பேரப்பிள்ளைகள் என அனைவரும் சென்னையில் வசித்தாலும் ராமதாசும் அவரது மனைவி சரஸ்வதி அம்மாளும் இன்னும் தைலாபுரம் தோட்டத்தில் தான் வசித்து வருகின்றனர். இதற்கு காரணம் விவசாயத்தின் மீதுள்ள ராமதாஸின் அளவுகடந்த நேசம் தான். இதனிடையே மாமரங்களும், தென்னை மரங்களும் தான் தங்களுக்கு வருவாய் ஆதாரம் என்பதை இந்த மரங்கள் தான் ''எங்களுக்கு சோறு போடுகிறது'' எனக் கூறியுள்ளார்.

தென்னை, மாமரம், நாவல், நீர்மருது, மகாகனி, பூவரசு, சில்வர் ஓக், இலுப்பை, வேங்கை, செம்மரம், குமிழ் தேக்கு, வெண்கடம்பு, மலைவேம்பு, ரோஸ் வுட் (Rose Wood), மூங்கில், தீக்குச்சி மரங்கள் என ராமதாஸ் வளர்க்கும் மரங்களை பற்றி சொன்னால் கணக்கு வழக்கின்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

இதனிடையே தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், மரம் நடும் அறமே மாபெரும் அறம் இயக்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+