ramadoss second wife: 2வது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய ராமதாஸ்! நர்சுடன் நடந்த திருமணம்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய விவகாரம். 66 வயதான செவிலியர் சுசிலாவுடன் ராமதாஸ் நட்சத்திர ஹோட்டலில் 50வது திருமண நாளை கொண்டாடியிருக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வில் ராமதாஸின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் பாமகவில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இந்த சுசிலா தான் காரணம் என பாமகவினர் அப்போதே சொல்லி வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுசிலாவுக்கு 66 வயதாகும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே செவிலியர் சுசீலாவை ராமதாஸ் 2வது திருமணம் செய்துகொண்டார் என்கின்றனர் 'பழைய' பாமகவினர்.

2026 தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் பிரதான அரசியல் கட்சிகள் பிரச்சார களத்தில் குதித்துள்ளன. ஆனால் உட்கட்சி மோதலால் பாமக சிக்கித் தவித்து வந்தது. தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு நிலவி வந்த நிலையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் பாமகவில் முளைத்தன.

அன்புமணி ராமதாஸ் நீக்கப்பட்டது, ராமதாஸ் போட்டிப் பொதுக்குழு நடத்தியது என பல பிரச்சனைகள் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தின. இந்த நிலையில் கடந்த மாதம் ராமதாஸ் தனது மனைவி சரஸ்வதியுடன் திருமண நாளைக் கொண்டாடினார்.

ramadoss second wife

ராமதாஸ்

அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த நிலையில் தற்போது ராமதாஸ் இரண்டாவது மனைவியுடன் திருமண நாளைக் கொண்டாடியதாக வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறி இருக்கின்றன. அவருடன் இருப்பவர் பெயர் சுசிலா. அவர் ஒரு செவிலியர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படையில் மருத்துவரான ராமதாஸ் தன்னிடம் பணியாற்றிய செவிலியர் சுசிலாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

ramadoss second wife

ராமதாஸ் சுசிலா

ஆனால் இதுவரை அது வெளி உலகத்திற்குத் தெரியவில்லை. சமீபத்தில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தனது இரண்டாவது மனைவியான சுசிலாவுடன் ஐம்பதாவது திருமண நாளை ராமதாஸ் கொண்டாடி இருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன. தற்போது சுசிலாவுக்கு 66 வயதாகும் நிலையில் 50வது திருமண நாளை ராமதாஸ் கொண்டாடி இருக்கிறார். அதாவது சுசிலாவுக்கு 16 வயதாக இருக்கும்போதே ராமதாஸ் அவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.

ராமதாஸ் இரண்டாவது மனைவி

இது வெளி உலகத்துக்கு அதிர்ச்சிகரமான செய்தியாக இருக்கலாம். ஆனால் உண்மையில் பாமகவில் நடந்த உட்கட்சி மோதல்களுக்கு செவிலியர் ஒருவர்தான் காரணம். தைலாபுரம் குடும்பத்துக்கு சம்பந்தமில்லாத ஒருவர் ராமதாசைத் தவறாக வழி நடத்துகிறார் என அன்புமணி தரப்பு குற்றம் சாட்டி வந்தது. அப்போது ஒன் இந்தியா தமிழ், செவிலியர் ஒருவர் தைலாபுரத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார் என செய்தி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்தான் சுசிலா என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராமதாஸ் சுசிலா திருமண நாள்

இதுவரை இலைமறை காயாக இருந்த சுசிலா விவகாரம் தற்போது பொதுவெளிக்கு வந்திருக்கிறது. இதுவரை ராமதாஸின் மனைவி சரஸ்வதிதான் பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக ராமதாஸ் மனைவியாக வெளிச்சப்படுத்தப்பட்டு வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக இரண்டாவது மனைவி சுசிலாவின் புகைப்படங்களும் அவருடன் ராமதாஸ் திருமண நாள் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகி இருப்பது அரசியலில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

விமர்சனம்

தமிழகத்தின் பிரபல அரசியல் கட்சியை பாமகவினர் விமர்சித்து வந்த நிலையில் தற்போது ராமதாஸின் செயலால் அந்தக் கட்சியை நோக்கிப் பலரும் கேள்விக்கணைகளைத் தொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ராமதாஸ் இந்தத் திருமண நிகழ்வை ரகசியமாகவே திருப்பதியில் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அவருடன் இருக்கும் சிலர்தான் இந்தப் புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் கசியவிட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+