பாசமழை பொழிந்த ராமதாஸ், கையில் கிடைத்த ஃபுல் பவர்! அன்புமணி முடிவால் அடுத்தடுத்து நடப்பது என்ன?
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடந்த சில காலமாக நிலவி வந்த அரசியல் மற்றும் குடும்ப ரீதியிலான கருத்து வேறுபாடுகள், இப்போது ஒருவழியாக சுமுக முடிவுக்கு வந்துள்ளன... இந்த இணைப்பு ஒருபுறம் மகிழ்ச்சியை தந்தாலும், மறுபுறம் சில சிக்கலையும், குழப்பத்தையும் தந்துள்ளதாம். அது என்ன??
ராமதாஸின் 61-வது திருமண நாளையொட்டி, அன்புமணி தனது குடும்பத்துடன் நேரில் சென்று, தன்னுடைய் அப்பாவை சந்தித்த நிகழ்வு, தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

டாக்டர் ராமதாஸ் - அன்புமணி
இந்த சந்திப்பின் போது, தந்தையும் மகனும் உணர்ச்சிவசப்பட்டுக் தழுவிக்கொண்டனர்.. கட்டிப்பிடித்துகண்ணீர் சிந்தினர்.. இதையடுத்து, பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் உள்ளிட்ட அதன் 34 துணை அமைப்புகளின் முழுப் பொறுப்புகளையும் அன்புமணியிடம் ராமதாஸ் ஒப்படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு, இணைப்பினை கட்சியின் மூத்த தலைவரும் கௌரவத் தலைவருமான ஜி.கே.மணி வரவேற்றுள்ளார். "குடும்பப் பாசமும் உறவும் மீண்டும் நிலைத்திருப்பதைக் காட்டும் இந்த நிகழ்வு, ஒரு நல்ல தொடக்கமாகும்; இது இன்றைக்கு நாடு முழுவதும் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. கொஞ்சம் காலதாமதமாக நடந்திருந்தாலும் இந்தச் சந்திப்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தலைவர்கள் நேரில் சந்தித்துப் பேசும்போது இயல்பாகவே அனைத்துக் கருத்து வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்றார்
அதிகாரப் பகிர்வு
இருந்தாலும் இந்தத் திடீர் சமாதானமும் அதிகாரப் பகிர்வும் கட்சிக்குள் ஒரு புதிய அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. 2 தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிய காலகட்டத்தில், ராமதாஸால் கட்சியை வழிநடத்தப் புதிய மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
குறிப்பாக, பொதுச்செயலராக முரளிசங்கர், இணை பொதுச்செயலராக முன்னாள் எம்.எல்.ஏ. அருள், பொருளாளராக சையத் மன்சூர் ஆகியோரும், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி செயல் தலைவராகவும், அவரது மகன் சுகந்தன் மாநில செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பேற்றனர்.
தற்போது முழு அதிகாரமும் அன்புமணியின் கைக்கு வந்துள்ளதால், ராமதாஸால் நியமிக்கப்பட்ட இந்த நிர்வாகிகள் மத்தியில் தங்களுடைய எதிர்காலப் பதவி குறித்து ஒருவித கலக்கமும் தொற்றிக்கொண்டுள்ளதாம்.
பாமக உட்கட்சி குழப்பம்
அதுமட்டுமல்ல, இப்போது கட்சியில் மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், அவர்கள் மீண்டும் ஒன்றாக இணையும் போது அடிமட்டத் தொண்டர்களுக்குச் சில மனக்கசப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஒருவேளை டாக்டர் ராமதாஸ், அன்புமணி 2 பேரும், அனைத்து மட்ட நிர்வாகிகளையும் நேரில் அழைத்து, இனி ஒற்றுமையாகச் செயல்படுவோம் என்று பேசி முடிவெடுத்தால், மனஸ்தாபங்கள் கட்சியின் அனைத்து மட்டங்களிலிருந்தும் நீங்கக்கூடுமாம்.
இதுகுறித்து அரசியல் விமர்சகர்கள் சொல்லும்போது, இனி பாட்டாளி மக்கள் கட்சியின் ஒட்டுமொத்த முகமாக அன்புமணி ராமதாஸே செயல்படவுள்ளார். கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில், பழைய கசப்பான சம்பவங்களை மனதில் வைத்துக்கொள்ளாமல், மக்களிடம் செல்வாக்குள்ள திறன் மிக்கவர்களுக்கே அவர் முக்கியத்துவம் அளிப்பார் என்று நம்பப்படுகிறது.
அன்புமணி அதிரடி முடிவு?
ராமதாஸால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளாக இருந்தாலும், அவர்கள் கட்சிக்கு வலிமை சேர்க்கக் கூடியவர்களாக இருந்தால் பதவியில் நீடிக்க வாய்ப்புள்ளது" என்று அனுமானம் கூறுகிறார்கள்..
ஆகமொத்தம், இந்த உள்கட்சி அதிகார மாற்றமும் குடும்ப இணக்கமும், வரும் காலங்களில் பா.ம.க.வின் தேர்தல் அரசியலிலும் தமிழக அரசியல் களத்திலும் எந்த மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications