சாத்தியமான டிடிவி தினகரனின் இணைப்பு.. அடுத்த குறி ராமதாஸ்.. பாஜக போடும் மெகா பிளான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று என்டிஏ கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டுவிட்டதாக பேசப்படும் நிலையில், அடுத்தக் கட்டமாக ராமதாஸ் தரப்பை சமாதானம் செய்யும் பணியில் பாஜக ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. பாஜகவின் இந்த மெகா கூட்டணி திட்டம் பலிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் நீடித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில் அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கிய பின், இது வெளிச்சத்திற்கு வந்தது. இதன்பின் இருவரும் இரு அணிகளாக பிரிந்து பாமக தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தொடர்ந்து பேசி வருகின்றனர்.

Ramadoss vs Anbumani

ஒரு கட்டத்தில் அன்புமணியை ஒவ்வொரு நாளும் ராமதாஸ் காட்டமாக விமர்சிக்க தொடங்கினார். அன்புமணிக்கு தலைமைப் பண்பே இல்லை என்றும், அவரை மத்திய அமைச்சராக்கியதே தவறு என்றும் சாடத் தொடங்கினார். இன்னொரு பக்கம் அன்புமணியோ, ராமதாஸ்க்கு வயதாகிவிட்டது. அவரை சுற்றியுள்ளவர்களே அவரை இயக்குகின்றனர். இதற்கு திமுகவே காரணம் என்றும் விமர்சித்து வருகிறார்.

இதனிடையே அன்புமணி தரப்புடன் கூட்டணி பேச்சுவார்த்தையை அதிமுக முடித்தது. கடந்த வாரம் சென்னையில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வந்த அன்புமணி, அதிமுக - பாமக கூட்டணியை உறுதி செய்தார். அப்போதே பாமகவுக்கான தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டதாக இருவரும் தெரிவித்தனர். ஆனால் ராமதாஸ் பற்றிய கேள்விகளுக்கு அன்புமணியும், எடப்பாடி பழனிசாமியும் பதில் அளிக்கவில்லை.

இருப்பினும் ராமதாஸ் தரப்பு எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் அன்புமணி இணைந்துவிட்ட சூழலில், ராமதாஸ்ம் அதே கூட்டணியை நோக்கி செல்வது கடினம் என்று பார்க்கப்படுகிறது. ராமதாஸ் தரப்புடன் திமுகவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் இறுதி முடிவை திருமாவளவன் எடுக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜனவரி 23ஆம் தேதி என்டிஏ கூட்டணியின் பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பேனரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலமாக என்டிஏ கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் ஒப்புக்கொண்டுவிட்டதாக பேசப்பட்டு வருகிறது. அவரும் என்டிஏ கூட்டணியில் இணைவதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று அழைத்து வந்த டிடிவி தினகரன், தற்போது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று கூட்டணியில் இணைந்திருக்கிறார். இதனால் என்டிஏ கூட்டணியில் ராமதாஸ் தரப்பையும் கொண்டு வர பாஜக தலைவர்கள் முயற்சிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் ராமதாஸ் முடிவு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+