ராமஜெயம் கொலை வழக்கு.. புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.ஐ.டி அதிகாரிகளோடு திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக சேர்த்து புலன் விசாரணை செய்ய கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும் சிபிஐயின் புலன் விசாரணயில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் சிபிஐயிடமிருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிபிசிஐடி டிஜிபி கண்காணிப்பில் தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் உள்ளடக்கிய, சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி.) நியமித்து உத்தரவிட்டது. இந்த எஸ்.ஐ.டி சார்பில், தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில இடைக்கால விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக காவல் துறையின் சார்பில் ஆஜரான மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா ஆஜராகி "இந்த வழக்கில் பல்வேறு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு கொலைக்கான உள்நோக்கங்களும் ஆராயப்பட்டு புலன் விசாரணையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த ஜெயக்குமார் திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளராக மாற்றப்பட்டாலும் தொடர்ந்து தொய்வின்றி புலன் விசாரணை சென்றதாகவும் தற்போது அவர் கடலூர் மாவட்ட எஸ்.பியாக பணிமாற்றம் செய்திருப்பதால் புலன் விசாரணை பாதித்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக திருச்சி அல்லது திருச்சி அருகிலுள்ளவர்களை புலன் விசாரணை அதிகாரிகளாக நியமித்தால் வழக்கின் புலன் விசாரணைக்கு எளிதாக இருக்கும் என கூறினார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுந்தர் மோகன், கடலூருக்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்ட ஜெயக்குமார் எஸ்.பி.க்கு மாற்றாக திருச்சி டிஐஜி, தஞ்சாவூர் எஸ்.பி ஆகியோரை கூடுதலாக நியமித்து ஏற்கெனவே இருக்கக்கூடிய எஸ்.ஐ.டி அதிகாரிகளோடு புலன் விசாரணை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications