Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Karakattakaran: 37 ஆண்டுகள் கழித்து! ராமராஜன்- கனகா சந்திப்பு! கரகாட்டக்காரன் 2-க்கு Hint?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல ஆண்டுகளுக்கு பிறகு, கரகாட்டக்காரன் படத்தில் நடித்த ராமராஜனும் கனகாவும் மீண்டும் சந்தித்துக் கொண்டதை அடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கரகாட்டக்காரன் 2 சாத்தியமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் எப்போதும் எவர்கிரீன் படங்களில் ஒன்றாக கரகாட்டக்காரன் உள்ளது. அந்த படத்தை இன்று பார்த்தாலும் அதில் இருக்கும் காதல், சண்டை, துக்கம், ஏக்கம், காமெடி, பக்தி, கலை ஆகியவற்றை யாராலும் மறக்கவே முடியாது.

ramarajan kanaka chennai

அதுதான் கனகாவின் முதல் படம். அவர் கண்ணை உருட்டுவதும் சிரிப்பதும், கண்களை விரித்து முறைப்பதும் என ரசிகர்கள் அவரது நடிப்பை ரசித்தார்கள்.

கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன் படத்தில் கூட நடிக்க கனகாவும் அந்த அளவுக்கு ஆர்வம் இல்லையாம். அந்த படத்தில் நடித்துவிட்டு விட்டுவிடலாம் என இருந்தவர், அந்த படம் ஹிட்டடித்ததும் தொடர்ந்து நடித்தாராம்.

தேவிகாவின் மகள்

இவர் பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகளாவார். ஒரு முறை தேவிகாவும் கனகாவும் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருந்தனராம். அப்போது கனகா பட்டு பாவாடை தாவணியில் இரட்டை ஜடை போட்டுக் கொண்டிருந்தாராம்.

கங்கை அமரன்

அவர்கள் கங்கை அமரன் வீட்டு வழியாக சென்ற போது அவரது மனைவி பார்த்து, தனது கணவருக்கு காட்டியிருக்கிறார், அதாவது, "தேவிகாவும் கனகாவும் செல்கிறார்கள்" என்று! தாவணியில் கனகாவை பார்த்ததும் அவர்தான் கரகாட்டக்காரன் ஹீரோயின் என கங்கை அமரன் முடிவு செய்துவிட்டாராம்.

தேவிகாவிடம் பேசிய கங்கை அமரன்

இதையடுத்து தேவிகாவிடம் பேசி சம்மதம் வாங்கி நடிக்க வைத்தாராம். பாவாடை தாவணியில் நடித்த கனகாவுக்கு அந்த வேடம் பொருந்திவிட்டது. இதையடுத்து அதிசய பிறவி படத்திலும் பாவாடை தாவணி அணிந்து ரஜினியுடன் ஜோடியாக நடித்திருந்தார்.

தேவிகா இறந்ததால் மனஉளைச்சல்

பிரபுவுடன் கும்பக்கரை தங்கய்யா, விஜயகாந்துடன் கோயில் காளை, சக்கரைத் தேவன், ஜல்லிக்கட்டுக் காளை, பெரிய குடும்பம், விரலுக்கேத்த வீக்கம், சிம்மராசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரது தாய் இறந்ததும் தந்தையின் பராமரிப்பில் இருந்த கனகாவை அவரது தந்தை தேவதாஸ் சொத்துக்காக துன்புறுத்தியதாக செய்திகள் வந்தன. தாய் இல்லாத வெறுமை, தந்தையின் கொடுமை என மன உளைச்சலால் கனகா வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வந்தார்.

குட்டி பத்மினி

கடந்த ஆண்டு கனகாவை குட்டி பத்மினி சந்தித்து அவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அப்போதுதான் கனகாவா இது என அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

இதையடுத்து குட்டி பத்மினியின் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளிப்பதாக கனகா ஒப்புக் கொண்ட நிலையில் அந்த பேட்டிக்காக அவரை குட்டி பத்மினி தொடர்பு கொண்ட போது போனை எடுக்கவில்லையாம். இப்படி கனகாவை சுற்றி நிறைய மர்மங்கள் நிறைந்துள்ளன.

ராமராஜன்

அது போல் ராமராஜனுக்காகவே கரகாட்டக்காரன் படம் மதுரையில் ஓராண்டு ஓடி சாதனை படைத்ததாம். இவர் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பின்னர் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன்.

ஆனால் நளினியும் ராமராஜனும் பிரிந்து விட்டனர். இதன் பிறகு ராமராஜன் அதிமுகவில் இணைந்தார். அதிமுக கழக பேச்சாளராக இருந்தார் 1998ஆம் ஆண்டு திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்டோருக்கு மத்தியில் ராமராஜனுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ராமராஜன் சாமானியன் என்ற படம் 2024 ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

ராமராஜன்- கனகா சந்திப்பு

இந்த நிலையில் ராமராஜனை கனகா சந்தித்துள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் இருவரும் சந்தித்துள்ளனர். கனகா, ராமராஜனின் வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். இருவரும் மதிய உணவை அருந்தி பழைய நினைவுகளை அசை போட்டுள்ளனர்.

இந்த திடீர் சந்திப்பு எதற்காக என தெரியவில்லை, கரகாட்டக்காரன் 2 படத்திற்கு வாய்ப்பிருக்கிறதா, இல்லாவிட்டால் கனகாவுக்காக வேறொரு படம் தயாராகி வருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இருவரும் ஜோடியாக நடிக்கும் நாளை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+