தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் கொண்டாட்டம்.. தலைவர்கள் வாழ்த்து
சென்னை: ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. அதன்படி காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ரமலான் நோன்பு இருப்பது. இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலானில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பை கடைப்பிடிப்பார்கள்.

ஒரு மாதம் வரை இஸ்லாமியர்கள் அதிகாலை முதல் சாயங்காலம் வரை உணவு உண்பதை நிறுத்தி விரதம் இருப்பார்கள். மாலை நேரத்தில் இப்தார் விருந்தாக உணவு எடுத்து கொள்வார்கள்.
ரம்ஜான் கொண்டாட்டம்
இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதி முதல் ரமலான் நோன்பு தமிழகத்தில் தொடங்கியது. அன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வந்தனர். ஒரு மாதம் வரை நோன்பு காலம் இருக்கும். அதன்பிறகு இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் தொடங்கும்போது ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.
ரம்ஜான் பண்டிகை வானில் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடப்படும். நேற்று முன்தினம் வானில் பிறை பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் பிறை தெரியவில்லை. இதையடு்து இன்று (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் பிறை தெரிந்ததால் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சிறப்பு தொழுகை
ஆனால் தமிழகம் உள்பட இந்தியாவின் பிற இடங்களில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று காலையிலேயே தமிழ்நாட்டில் ரம்ஜான் பண்டிகை களைகட்டி உள்ளது. இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து மசூதிகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர்.
ஈத்கா மைதானங்களில் சிறப்பு தொழுகைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகையையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்பட பிற கட்சிகளின் தலைவர்கள் ரம்ஜான் வாழ்த்து கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications