இன்று நாடு முழுக்க கொண்டாடப்படும் ரமலான் பண்டிகை.. பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
சென்னை: சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று பிறை தென்பட்டதால் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அரசு தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்கள் புனித பண்டிகையாக ரமலானை கொண்டாடி வருகிறார்கள். ரமலான் மாதத்தில் மாதம் முழுக்க நோன்பு இருக்கும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இஸ்லாமிய நாட்காட்டியில் ஷவ்வால் மாதம் தொடங்குவதையே இது குறிக்கிறது. கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

ரமலான்
ரமலான் பண்டிகை பிறையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும். உலகின் ஒவ்வொரு பகுதிகளிலும் பிறை தோன்றுவதை வைத்தே ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இதனால் ரமலான் பண்டிகை உலகெங்கும் ஒருநாள் வரை மாறுபடும். தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று மாலை ஷவ்வால் மாத பிறை தென்பட்டதாக அரசு தலைமை ஹாஜி சலாஹூதின் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பிறை தெரிந்ததைத் தொடர்ந்து, இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அரசு தலைமை ஹாஜி அறிவித்தார்.
சிறப்பு தொழுகை
அதன்படி இன்று நாடு முழுக்க ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஈகை திருநாளை முன்னிட்டு மசூதிகளில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை எழும்பூர் மாநகராட்சி திடலில் சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் பலரும் பங்கேற்றனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இதேபோல நெல்லை, கோவை என பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைவர்கள் வாழ்த்து
ரமலான் பண்டிகை இன்று நாடு முழுக்க கொண்டாடப்படும் நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வர் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில், "நாட்டு மக்கள் அனைவருக்கும் குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நல்வழியில் முன்னேறும் மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து குறிப்பில், "அனைவருக்கும் ரமலான் வாழ்த்துகள். நமது சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணை உணர்வை இந்த பண்டிகை அதிகரிக்கட்டும். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில், "அறம் பிறழா மனித வாழ்வை வலியுறுத்தும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியச் சகோதர, சகோதரிகளுக்கு உளம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இஸ்லாமிய சமுதாய மக்கள் ஒரு மாத காலம் கடுமையாக நோன்பிருந்து பசித்துன்பம் என்பதை அனுபவத்தால் உணர்ந்து, ஏழை எளியோர் பால் இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க ரமலான் திருநாளை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். நபிகள் பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளை கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் திமுக தலைவர் என்ற முறையிலும், முதல்வர் என்ற பொறுப்பிலும் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன்" என்று தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
அதேபோல அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "இஸ்லாமியப் பெருமக்கள் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளில், அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபோல பல்வேறு அரசியல் தலைவர்களும் ரமலான் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications