Exclusive விஜய்க்கு 3 சாய்ஸ்! அதிமுக துணையின்றி யாராலும் ஜெயிக்க முடியாது! அடித்துச் சொல்லும் பாண்டே
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்கும் நிலையில், கூட்டணி தொடர்பாக விஜய்யின் முடிவு என்னவாக இருக்கும். விஜய்க்கு வெற்றி வாய்ப்பு கிடைக்குமா என்பது பற்றி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அலசி இருக்கிறார் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே.
அண்ணாமலை லண்டன் போவதற்கு முன், "நான் லண்டன் போனாலும் சண்டை தொடரும். அறிக்கைகள் வரும். வார்த்தைப் போர் நடக்கும்" எனத் தெரிவித்தார். ஆனால், அண்ணாமலை லண்டன் சென்ற பிறகு எந்த அறிக்கையும் வெளிவரவில்லை. ஆக, அண்ணாமலை ஏதோ ஒரு வகையில் சைலண்ட் ஆக்கப்பட்டுள்ளாரா? பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் அண்ணாமலை இடையே பனிப்போர் எனக் கூறப்படுகிறது. அண்ணாமலை, கேசவவிநாயகம் தலைமையிலான கமிட்டியை விரும்பிய நிலையில், அரவிந்த் மேனன் தான் எச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்ததாக கூறப்படுகிறது.

பாண்டே பேட்டி: இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டியளித்த மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பேசுகையில், "நயினார் நாகேந்திரன், ராம.சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் அதிமுக உடன் கூட்டணி அமைப்பதை விரும்புகிறார்கள் என்றால் அவர்கள் அண்ணாமலைக்கு எதிர்ப்பு என புரிந்துகொள்ளக் கூடாது. அவர்கள் அவர்களின் கருத்தைச் சொல்கிறார்கள். இவர்களைப் போல வலிமையான பல தலைவர்கள் அதிமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.
பாஜகவுக்கு நீண்டகால பலன்: அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து இருந்தால் ஓட்டு கிடைக்கும். இல்லையென்றால் ஓட்டு கிடைக்காது. அதேபோல சேர்ந்து இருந்தால் குறைந்த கால பலன் கிடைக்கும். பிரிந்து இருந்தால் பாஜகவுக்கு நீண்டகால பலன். பாஜக இப்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால், கடந்த தேர்தலில் அதிமுக துரத்தி விட்டதால் போக இடமில்லாமல் பாஜக தனி கூட்டணி அமைத்ததாக அர்த்தமா? பாஜக சுயமாக சொந்தக் காலில் நின்று சாதித்தால் வெற்றி." எனத் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு 3 சான்ஸ்: மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக எழுந்து வரும் சர்ச்சைகள், விஜய் யாருடன் கூட்டணி அமைப்பார், 2026 சட்டசபை தேர்தலில் விஜய்யின் முடிவு எப்படி இருக்கும் என்பது பற்றியும் மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே பேசியுள்ளார்.
பாண்டே பேசுகையில், "விஜய்க்கு முன்பாக 3 வாய்ப்புகள் இருக்கின்றன. 1. தனித்துப் போட்டி 2. என் தலைமையில் கூட்டணி 3. இன்னொரு கூட்டணியில் இணைவது. அவர் அதிமுக உடன் சேரலாம். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இன்னொரு அணியை அமைக்கலாம். அல்லது சீமான் உடன் சேரலாம். யாருமே வேண்டாம் என்று தனித்தும் நிற்கலாம். விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதைச் சொன்னால் தான் தெரியவரும்.
திமுக தடுக்கிறதா?: சினிமாவில் ஒரு பாட்டில் பணக்காரன் ஆகிவிடலாம். ஒரு ஓட்டில் முதலமைச்சர் ஆகிவிடலாம். ஆனால் அரசியலில் அப்படி இருக்காது. அதை விஜய்க்கு தெரியவைப்பதற்கான ஏற்பாடு தான், அவர் மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறை 21 கேள்விகள் கேட்டது. அரசியல் அவ்வளவு எளிதல்ல எனக் காட்டுவதற்கு தான் கேள்வி கேட்கிறார்கள். விஜய் மாநாட்டை திமுக அரசு தடுக்காது என நினைக்கிறேன். விஜய்யை திமுக அரசு தடுக்க நினைத்தால் விஜய்க்கு நல்லது தான். விஜய்யை எதிர்க்க எதிர்க்க அவர் வளர்வார்.
அதிமுக துணை இல்லாமல் ஜெயிக்கவே முடியாது: திமுக கூட்டணியை பிரிக்காமல் வேறு யாரும் ஜெயிக்க முடியாது. அதேபோல, அதிமுக துணையில்லாமல் யாராலும் ஜெயிக்க முடியாது. சீமானாக இருந்தாலும் சரி, விஜய்யாக இருந்தாலும் சரி அதிமுக துணை இல்லாமல் அவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது. " எனத் தெரிவித்துள்ளார் பாண்டே.
-
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
திருப்பூர் ரிதன்யா வரதட்சணை மரணம்: பைத்தியக்காரன் போல சுத்துறோம்! விஜய்க்கு ரிதன்யாவின் பெற்றோர் மனு -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications