எதிர்பார்க்காத வேகம்.. உலகிற்கே ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. தரப்போகும் ராணிப்பேட்டை.. சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டையில் அமையும் Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்யும் டாடா தொழிற்சாலை கட்டுமானம் 30 சதவிகிதம் முடிந்துள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதம் முழுமையான கட்டுமானம் அங்கே முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நிறுவனம் சென்னைக்கு பதில் ராணிப்பேட்டைக்கு சென்றுள்ளது. தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதை பறைசாற்றும் விதமாக தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகின்றன.

investment tamilnadu m k stalin politics

டாடா மோட்டார்ஸ் குழுமம் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆலையில் மூன்றில் இரண்டு பங்கு Jaguar மற்றும் Land Rover Car களை உற்பத்தி செய்யவும், மீதமுள்ளவை Tata EVக்காகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி ஆலை

இது போக தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானம் முடிந்து உள்ளது. வரும் ஜூன் மாதம் இறுதியில் இந்த வின்பாஸ்ட் ஆலை திறக்கப்பட உள்ளது. உட்புறம் அனைத்து மெஷின்களும் பொருத்தப்பட்ட நிலையில், விரைவில் சோதனைகள் செய்யப்பட உள்ளது. சோதனைகள் முடிந்த பின் ஜூன் கடைசி வாரம் ஆலை திறக்கப்படும். இப்போது இ வாகனங்கள் தயாரிப்பில் முன்னிலையில் இருக்கிறது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை (EV) தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாகும். உலகின் நம்பர் 1 பிராண்ட் இதுதான். இந்த நிறுவனம்தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது. அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது.

இந்தியாவில் மிக வேகமாக மேற்கொள்ளப்பட்ட திட்டம் இதுதான். அதாவது முதலீடு அறிவிக்கப்பட்டு அது புரிந்துணர்வு ஒப்பந்தமாக மாறி.. முதலீடாக மாறி.. தொழிற்சாலையாக மாறியதில் இந்த திட்டம்தான் மிக வேகமான திட்டம் ஆகும். கடந்த வருடம்தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் அனைத்து அனுமதிகளை முடிந்து தளம், மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிந்ததோடு.. உள்ளே மெஷின்களை நிறுவும் பணிகளும் முடிந்து உள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

24-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% (கடந்த ஆண்டில் 10.15% இல் இருந்து உயர்ந்து உள்ளது). இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 Bn செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இப்போது தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலை மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+