Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யை சங்கீதா நெருங்கவிடாமல்! குறுக்கே இருக்கும் அந்த நபர் யார் தெரியுமா? ரஞ்சனா பரபரப்பு தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யை சங்கீதாவோ குழந்தைகளோ, பெற்றோரோ நெருங்கவிடாமல் குறுக்கே ஒருவர் இருக்கிறார். அவர் யார் என்பது குறித்து தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கெருகம்பாக்கத்தில் தனது வீட்டில் ரஞ்சனா நாச்சியார் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: 27 வருடங்கள் கட்டிய மனைவி, குழந்தைகளை கூட விஜய் பார்ப்பதில்லை. அவரை பார்க்க நடுவில் ஒருவர் இருக்கிறார். அது போல் பெற்ற தாய், தந்தையரும் விஜய்யை பார்க்க முடியாது, அங்கு ஒருவர் குறுக்கே நிற்கிறார். அந்த நபரின் பெயரை நான் தேவைப்பட்டால் சொல்வேன்.

Ranjana Nachiyar

அப்படியென்றால் விஜய் யாரு, எதற்காக அவரை நெருங்காத அளவுக்கு சுற்றி இத்தனை தடைகள்? பாடிகார்ட்ஸ், தடைகள் எல்லாம் மற்றவர்கள் நெருங்க விடாமல் இருக்கலாம். ஆனால் சொந்த குடும்பத்தினரை நெருங்க விடாமல் இருப்பதா?

ரஜினிகாந்தை பாருங்கள், அவருக்கு நிறைய பாடிகார்ட்ஸ் இருக்கிறார்கள். அதற்காக அவர் குடும்பத்துடன் தொடர்பில் இல்லாமலா இருக்கிறார்கள். பொது இடங்களில் ரசிகர்களை பார்த்தால் கையசைக்கிறார்கள். நலம் விசாரிக்கிறார்கள். அதனால்தான் அவர் சூப்பர் ஸ்டார்!

விஜய் அதை கூட செய்ய மறுக்கிறார். காரின் ஜன்னலை கூட திறக்க மறுக்கிறார். எதற்காக இந்த மர்ம வாழ்க்கை? திரிஷாவுடன் நட்பு ரீதியில் விஜய் வந்தார் என பலர் முட்டுக் கொடுக்கிறார்கள். ஆனால் விஜய் மனைவி சங்கீதா, தனது கணவருக்கு நடிகையுடன் தொடர்பு என குற்றம்சாட்டியுள்ள நிலையில், நாம் இருவரும் ஒன்றாக செல்லக் கூடாது என கூறி ஒதுங்குவதுதானே நல்ல நட்பு! இதை திரிஷா செய்திருக்கணும்தானே! என ரஞ்சனா தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து நேற்றைய தினம் அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.. முக்கியமாக எங்கள் தலைவர், விஜய் அவர்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று தமிழக வெற்றி கழகம் (TVK) சார்பாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அந்த மேடையில் தலைவர் பல கருத்துகளை பகிர்ந்தார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே நிலவிவரும் பிரச்சினையை நேரடியாகச் சொல்லாமல், கோடிட்டு காட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தது.

"அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். அது worth ஏ இல்லை" என்று கூறினீர்கள். அந்த ஒரு வாக்கியம் தான் இன்று பல கேள்விகளை எழுப்புகிறது. எது worth இல்லை தலைவா? உங்கள் மனைவியா? அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா?

ஒரு அரசியல் தலைவர் பேசும் ஒவ்வொரு சொல்லும், ஒரு குடும்பத்தில் மட்டும் ஒலிக்காது. அது ஒரு சமூகத்தின் மனதிலும் ஒலிக்கும். உங்கள் மனைவி அவர்கள் உங்கள் வீட்டுக்குள் அவர்களை அனுமதிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் என்று செய்திகள் வெளிவருகின்றன.

உங்கள் மனைவியை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டுகள் பேசப்படும் நேரத்தில், "வீட்டிற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக தருகிறேன்" என்று மேடையில் பேசுவது ஒரு கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா?

ஒரு பக்கம் பெண்கள் உயர்வு பற்றி பேசுகிறீர்கள். மற்றொரு பக்கம் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட உங்கள் வார்த்தைகளில் காணப்படவில்லை என்றால், அந்த அரசியல் எதற்காக? உங்கள் உண்மை முகம்தான் என்ன ? உங்களை தெய்வமாகக் கருதி வாழும் உங்கள் ரசிகர்கள், குறிப்பாக இன்றைய Gen-Z தலைமுறையினர், சமூக ஊடகங்களில் என்ன பேசுகின்றனர் தெரியுமா? "எங்கள் தலைவன் ஏழு பொண்டாட்டி கட்டுவான், அதில் தவறு இல்லை" என்று எழுதுபவர்கள் இருக்கின்றனர். "நான் உனக்கு பொண்டாட்டியாக வருகிறேன்; உன் மனைவியை விட்டு விலகிவிடு" என்று எழுதும் பதிவுகளும் இருக்கின்றன.

இந்த மொழி யாரால் உருவாக்கப்பட்டது? இந்த மனநிலை எங்கே இருந்து வந்தது? ஒரு தலைவரின் சொல் ஒரு ரசிகனின் முழக்கமாக மாறும். ஒரு தலைவரின் செயல் ஒரு இளைஞனின் நடத்தை ஆகிவிடும். "தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே" என்ற பழமொழி உங்களுக்கு தெரியாதா? ஒரு நடிகையை கூட்டிக்கொண்டு பொது வெளியில் வரும்போது, அதை பார்த்து இன்றைய இளைஞர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்? "திருமணத்திற்கு பின்பு நாமும் இப்படியே வாழலாம்" என்ற எண்ணம் அவர்களிடம் விதைக்கப்படாதா?

இது தான் நம் தமிழ் கலாச்சாரமா? தமிழ் பண்பாடு பெண்களை பொருளாக பார்க்கவில்லை. மரியாதையாக பார்த்தது. தமிழ் மரபு பெண்களை இழிவுபடுத்தவில்லை. அவர்களை உயர்த்தியது. நம் கலாச்சாரம் என்ன சொல்கிறது? இழவு வீட்டிற்கு சென்று கேதம் கேட்பதே நம் பண்பு. அன்பும் மரியாதையும் காக்கும் வாழ்வே நம் வழி. துயரத்தில் இருக்கும் குடும்பங்களிடம் சென்று, அவர்களின் கண்ணீரை துடைப்பதே தமிழர் மரபு.

எனது மூதாதையரான வேலுநாச்சியாரை கொள்கைத் தலைவராக கூறிக்கொண்டு, பெண்ணியம் பேசும் நீங்கள், உங்கள் சொந்த வாழ்க்கையிலும் அந்த கண்ணியத்தை காக்க வேண்டாமா? பெண்ணியம் என்பது மேடையில் முழக்கம் அல்ல. வாழ்க்கையில் ஒழுக்கம். பெண் என்பது ஒரு உறவு மட்டும் அல்ல. ஒரு மரியாதை. இன்றைய Gen-Z தலைமுறையின் பெற்றோர்கள் கூட, உங்கள் செயல்-பேச்சுகளை பார்த்து மெதுவாக கவலைப்படத் தொடங்கியுள்ளனர். நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசியல் இயக்கம், தலைவரின் தனிப்பட்ட ஒழுக்கம் காரணமாக தேய்ந்து போகக் கூடாது. அது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் புறக்கணிக்கிறீர்களா?

"பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமனாக சீர் கொடுப்பேன்" என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள். அது நல்ல எண்ணம். ஆனால் அடுத்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன், பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது முக்கியம் இல்லையா ? நீங்கள் சீர் கொடுக்க வேண்டாம் தலைவா, இளைஞர்களை சீர் குலைக்காமல் இருப்பதே சிறந்தது. இவ்வாறு ரஞ்சனா பல்வேறு கருத்துகளை கண்டனங்களாக தெரிவித்திருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+