Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காந்தாராவை ஓரம் தள்ளிய ரன்வீர் சிங்கின் துரந்த் மூவி.. உலக அளவில் ரூ.870 கோடி வசூல் செய்து சாதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான துரந்த் (Dhurandhar) திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. உலக அளவில் இந்த படம் ரூ.870 கோடி வசூல் செய்து நடப்பு ஆண்டில் அதிக வசூல் செய்த டாப் 1 இடத்தை பிடித்து சாதனை படைத்து இருக்கிறது. இதன் மூலமாக காந்தாரா படத்தின் வசூல் சாதனையை இந்த படம் தட்டி தூக்கியுள்ளது.

நடப்பு 2025 ஆம் ஆண்டில் வசூலில் டாப் 1 இடத்தை தக்க வைத்து இருந்த காந்தாராவை பின்னுக்கு தள்ளி துரந்த் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. காந்தாரா சாப்டர் 1 உலக அளவில் ரூ.855 கோடி வசூல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Dhurandhar Movie Box Office Kantara

நடிகர் ரன்வீர் சிங் மற்றும் சஞ்சய் தத் நடிப்பில் உருவான படம் துரந்த். கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. 6 வளைகுடா நாடுகளை தவிர உலகம் முழுவதும் வெளியானது. இந்தி அதிரடித் திரைப்படமான இது 1999 இந்திய விமான கடத்தலுக்குப் பிறகு, இந்திய உளவாளிகள் பாகிஸ்தானில் ஊடுருவி பயங்கரவாத அமைப்பை முறியடிக்கும் ஒரு ரகசிய ஆபரேஷனை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டது.

ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இது மட்டும் இன்றி வசூலிலும் சொல்லி அடித்துள்ளது. பாகிஸ்தானில் 'ஆபரேஷன் லியாரி' மற்றும் இந்திய உளவுத்துறை நிறுவனமான 'ரா' மேற்கொண்ட ரகசியப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்குனர் ஆதித்யா தர் கதைக்களத்தை அமைத்து இருந்தார். இதனால் இந்த படத்தினை 6 வளைகுடா நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டது.

நடிகர் ரன்வீர் சிங்குடன், சஞ்சய் தத், நடிகர் மாதவன், சாரா அர்ஜுன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோரும் நடித்து இருந்தனர். படத்திற்கு உலகம் முழுக்க பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் படம் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. படம் வெளியாகி 20 நாட்கள் கூட ஆகாத நிலையில் உலக அளவில் ரூ.870 கோடி வசூல் செய்து சாதனை படைத்து இருக்கிறது.

நடப்பு 2025 ஆம் ஆண்டிலேயே அதிக அளவு வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை துரந்த் பிடித்துள்ளது. இதன் மூலம் காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வசூலை இந்த படம் முறியடித்துள்ளது. நடப்பு ஆண்டில் அதிகபட்சமாக ரூ.855 கோடி வசூல் செய்து காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் பிடித்து இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+