மசாலா தண்ணீரில் நீந்திய எலியை பார்த்த பிறகும் 31 பானிபூரி சாப்பிட்ட நபர்: இணையத்தை உலுக்கிய வீடியோ
சென்னை: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நிகழ்ந்த இந்த ஷாக்கிங் சம்பவம், தெருவோர உணவுகளின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த மிகப்பெரிய விவாதத்தை நாடு முழுவதும் உருவாக்கியுள்ளது.. இப்படியொரு விவாதத்துக்கு காரணம் ஒரு எலி ஆகும்.. இந்த எலி தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது... என்ன நடந்தது!!
சோஷியல் மீடியாவில் வீடியோ ஒன்று வைரலாகி கொண்டிருக்கிறது... ஒரு தெருவோரக் கடையில் பானி பூரிக்கு ஊற்றும் மசாலா தண்ணீர் வைத்திருந்த பாத்திரத்திற்குள் உயிருள்ள எலி ஒன்று நீந்திக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது..

அந்த எலி பாத்திரத்திற்குள் அசைவதையும், பின்னர் அங்கிருந்து வெளியே குதித்து ஓடுவதையும் காட்டும் வீடியோ இப்போது இன்ஸ்டாகிராமில் பயங்கரமாக பரவி வருகிறது..
பானி பூரி கடை
அமிர்தசரஸில் உள்ள ஒரு தெருவோர கடையில் பானி பூரி சாப்பிடும் போட்டி ஒன்று மிகவும் உற்சாகமாக நடந்து கொண்டிருந்தது.. பலரும் ஆர்வமாகப் போட்டி போட்டுக்கொண்டு பானி பூரிகளை சாப்பிட்டு கொண்டிருந்தனர்..
அந்த நேரம் பார்த்து, கரன் தன்ஜு என்ற இளைஞரும், தனது நண்பருடன் அந்த இடத்திற்கு சென்றிருந்தார்.. அங்கே பானி பூரி சாப்பிடும் போட்டி நடப்பதை பார்த்த அவர், அதை தனது செல்போனில் வீடியோ எடுக்க ஆரம்பித்தார்.. அப்போதுதான், உருளைக்கிழங்கு மசாலா மற்றும் மசாலா தண்ணீர் வைக்கப்பட்டிருந்த பெரிய வாளி போன்ற பாத்திரத்திற்குள் ஏதோ அசைவதை கவனித்தார்..
சந்தேகமடைந்து உற்று பார்த்தபோது, அதற்குள் ஒரு பெரிய எலி நீந்திக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார்.. உடனே கரன் தன்ஜு அந்த எலியை வீடியோ எடுத்தார்..
மசாலா தண்ணீரில் எலி
இதை பார்த்த கடைக்காரர், உடனே ஒரு கரண்டியை எடுத்து வந்து, எலியை பானிபூரி மசாலா பாத்திரத்திலிருந்து வெளியேற்ற முயற்சித்தார்.. சில வினாடிகளில் அந்த எலி பாத்திரத்தில் இருந்து வெளியே குதித்து அருகில் இருந்த சாக்கடைக்குள் ஓடி மறைந்தது.. இதையும் கரன் தெளிவாகவே வீடியோ எடுத்துவிட்டார்..
இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அருவருப்பில் முகம் சுளித்தனர்.. ஆசையாக போட்டியில் கலந்து கொண்டு பானி பூரி சாப்பிட்டவர்கள், "நாங்கள் சாப்பிட்ட உணவில் எலி விழுந்திருக்குமா?" என்று பீதியில் பயந்து போய் நின்றார்கள்.
வீடியோ எடுத்த இளைஞர் அங்கிருந்த கடைக்காரருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.. "மக்களின் ஆரோக்கியத்தோடு இப்படி விளையாடுகிறீர்களே, இது நியாயமா? எலி விழுந்து அசுத்தமான அந்த மசாலா மொத்தத்தையும் உடனே கீழே கொட்டுங்க, இனி அதை யாருக்கும் கொடுக்க கூடாது" " என்று கோபமாக சொன்னார்..
31 பானிபூரிகள்
ஆனால், அங்கே நடந்த வினோதமான விஷயம் என்னவென்றால், அந்தப் போட்டியில் கலந்து கொண்ட ஒருவர், பாத்திரத்தில் எலி இருந்ததை பார்த்த பிறகும் கூடப் போட்டியை நிறுத்தவில்லை.. அந்த அசுத்தமான மசாலாவிலேயே மொத்தம் 31 பானி பூரிகளை அவர் சாப்பிட்டு முடித்தது பார்ப்பவர்களைத் திகைக்க வைத்தது..
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியான சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான வியூவ்ஸ்களை பெற்றுப் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது..
உணவு பாதுகாப்பு
சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பார்த்த மக்கள் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.. "தெருவோர கடைகளில் சுத்தமே இல்லை" என்று ஒரு தரப்பினர் திட்டினாலும், இது யாராவது வேண்டுமென்றே செய்த சதியா அல்லது நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பொய்யான வீடியோவா என்றும் சிலர் சந்தேகிக்கின்றனர்..
எது எப்படியாக இருந்தாலும், உணவுப் பொருட்களை மூடி வைக்காமல் அஜாக்கிரதையாக இருந்த கடைக்காரரின் செயல் கண்டிக்கத்தக்கது..
எலிகள் மூலம் பிளேக் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற ஆபத்தான நோய்கள் பரவும் என்பதால், இத்தகைய சுகாதாரமற்ற கடைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.. எலியைப் பார்த்த பிறகும் ஒருவர் 31 பூரிகளை சாப்பிட்டதுதான் இப்போது ஊர் முழுவதும் பேச்சாக உள்ளது..
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications