Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"விட்ற மாட்டோம்".. ரேஷன் கார்டுதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. கடைகளுக்கு பறந்த உத்தரவு.. இனி நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவினை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார்..

 ration big announcement: Tamilnadu government ration shop employees accounting for non purchased item

ரேஷன்: அப்போது, ரேஷன் கடைகளில் உணவு பொருட்களுக்கான மானியம் வழங்க ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.. அதேபோல, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு ரூ.16,262 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுவரும் நிலையில், இந்த ரேஷன் கடை பொருள்களுக்காக அரசு சார்பாக 10500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது பேருதவியாக இருந்து வருகிறது..

ஆனால் பல ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு முறையாக ரேஷன் பொருட்களை வழங்காமல் கள்ளச் சந்தையில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றங்கள்: அதேசமயம் பல ரேஷன் கடைகளில் வெளி மாநிலத்திற்கும் ரேஷன் அரிசி கடத்தப்பட்டும் வருகின்றது... இந்த குற்றச்சாட்டெல்லாம் கடந்த சில மாதங்களாகவே எழுந்து வந்ததால்தான், அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.. குறிப்பாக, இந்த குற்றத்தைச் செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

 ration big announcement: Tamilnadu government ration shop employees accounting for non purchased item

பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடர்பான புகார்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது..

எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. 4 நாட்களுக்கு முன்புகூட, தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டிருக்கிறது.. இதற்காகவே சில புரோக்கர்களும் உள்ளதாக தெரிகிறது.. இவர்கள்தான், கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்...

ரேஷன் அட்டைதாரர்கள்: இதன்காரணமாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்றும் புகார்கள் கிளம்பி உள்ளன.. எனவே, 2 நாட்களுக்கு முன்பு, ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பது குறித்து இரு மாநில அதிகாரிகளும் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். அதில் அரிசியை கடத்தி கொண்டு செல்லும் வாகனங்கள் அதனை விற்பனை செய்வோர் குறித்த விவரங்களை சேகரிக்க முடிவு செய்யப்பட்டது.

எச்சரிக்கை: மேலும் மாநில எல்லை பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, அரிசியை கடத்துபவர்களை கண்டறிந்து, அவர்களின் ரேஷன் கார்டுகளையும் பறிமுதல் செய்து அரசின் நல திட்ட உதவிகள் கிடைக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த எச்சரிக்கையையடுத்து, ரேஷன் அரிசி கடத்தல் தமிழகமெங்கும் இனி கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும் நம்பப்படுகிறது..

இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு புகார கிளம்பி உள்ளது.. மாத இறுதியில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்காத பொருள்களுக்கும் வாங்கியதாக ரேஷன் கடை ஊழியர்கள் பதிவு செய்கிறார்களாம்.. இதுகுறித்த புகார்கள் நிறைய வர ஆரம்பித்துள்ளது.. அதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும்படியை அதிகாரிகள் உடனடியாக துவங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+