ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அறிவிப்பு.. இதை செய்யலேன்னா அட்டை கேன்சலாகிடும்.. 76 லட்சம் பேரா?
சென்னை: ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் (இ-கேஒய்சிபதிவு) பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31 க்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளது. எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் தங்களுடைய கார்டில் e-KYC செய்து கொள்வது கட்டாயமாகும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியிருக்கின்றன.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இலவசமாக ஒவ்வொரு மாதமும் அரிசி வழங்கப்படுகிறது.

கடைகளில் இலவச அரிசி
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) ரேஷன் கார்டிற்கு தலா 35 கிலோ, ஏழை குடும்பத்தை சேர்ந்த குடும்ப (பி.எச்.எச்.,) கார்டிற்கு நபருக்கு 5 கிலோ அதிகபட்சம் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
நகர்ப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 3 லட்சம் மற்றும் கிராமப்புறங்களில் ஆண்டு வருமான வரம்பு ரூ. 2 லட்சம் உள்ளவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். இலவச அரிசி பெறும், இந்த 2 பிரிவு கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்து, (இ- கே.ஓய்.சி.,) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது.
மார்ச் 31 கடை நாள்
அதாவது, அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்காகவே, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்படுகிறது. இந்த பணிகளை, வரும் மார்ச் 31க்குள் முடிக்க அவகாசமும் அளிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்றும் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
ஆனால், பலர் இன்னும் பதிவு செய்யாமல் இருக்கிறார்களாம். இவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடை அல்லது அரசு மையத்திற்கு சென்று, உங்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை கொடுத்து, பயோமெட்ரிக் தரவையும் (கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன்) வழங்க வேண்டும்... இதற்கு ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட செல்போன் நம்பர் தேவைப்படும். அனைத்து ரேஷன் கார்டுகளும் இனி டிஜிட்டல் வடிவில் கிடைக்கும். ரேஷன் வாங்கும்போது பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாகும்..
இவர்களுக்கு ரேஷன் கிடைக்குமா
இந்நிலையில், விரல் ரேகை இன்னமும் பதியாவர்கள் குறித்த விவரமும் வெளியாகியிருக்கிறது.. உயிரிழப்பு, வெளிநாட்டுக்கு நிரந்தரமாக சென்றது போன்ற காரணங்களால், கார்டுகளில் சிலரது பெயர்கள் நீக்கப்படாமல் இருக்கிறதாம்.. எனினும்கூட, அவர்களுக்கு உரிய பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
மொத்தம் சரிபார்க்கப்பட வேண்டிய, 3.65 கோடி உறுப்பினர்களில், இதுவரை, 2.80 கோடி பேர் பதிவு செய்துள்ள நிலையில், 76 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளதாக தகவல் வெளியாகியிரக்கிறது. இதனால், மார்ச்சுக்கு பிறகு பதிவு செய்யாதவர்களுக்கு, ரேஷன் கடைகளில் இலவச அரிசி தொடர்ந்து கிடைக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.
யாரெல்லாம் தகுதியற்றவர்கள்
சொத்து வரம்பாக, நகர்ப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் அடுக்குமாடி குடியிருப்பு வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் 100 சதுர மீட்டருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், நகர்ப்புறங்களில் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள், கிராமப்புறங்களில் சொந்தமாக டிராக்டர் அல்லது நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் ரேஷன் திட்டத்தின் கீழ் தகுதியற்றவர்கள் தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications