சென்னை மக்களே.. ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. சனிக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: பொது வினியோக திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நவம்பர் மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் நவம்பர் 9ம் தேதி அன்று சென்னை உள்ள 19 மண்டலங்களில் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டில் முகவரி மாற்றுவது, ரேஷன் கார்டில் குழந்தைகளின் பெயர் சேர்ப்பது, ரேஷன் கார்டில் செல்போன் எண்களை பதிவு செய்வது, ரேஷன் கார்டில் திருமணமான மகன் அல்லது மகள்களின் பெயரை நீக்குவது, புதிதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்றால், ஆன்லைனில் மேற்கொள்ளலாம். ஆனால் அப்படி ஆன்லைனில் மேற்கொண்டால் உடனே தீர்வு கிடைக்காது.

அதேநேரம் தாசில்தார் ஆபிஸ்க்கு சென்று விண்ணப்பித்தாலும், சில நாட்கள் அலைய வேண்டிய நிலையும் இருக்கும். இந்த சூழலில் அதிகாரிகள் அனைவரும் மக்களை தேடி செல்லும் வகையில் முகாம்கள் ஒவ்வொரு மாதமும் நடக்கிறது. அந்த முகாம்களில் சென்றுவிண்ணப்பிங்களை தந்தால் உடனடி தீர்வு கிடைக்கும். வருவாய்துறை , பொதுவிநியோகத்துறை என பல்வேறு துறைகள் அப்படி முகாம்களை அடிக்கடி நடத்தும். அந்த வகையில் பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் வரும் நவம்பர் 9ம் தேதி அன்று சென்னை முழுவதும் நடக்க உள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:பொது வினியோக திட்டத்தின் பயன்களை மக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுவது வழக்கமாகும்.
அதன்படி, இந்த (நவம்பர்) மாதத்துக்கான மாதாந்திர பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் முகாம் சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் 19 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் வருகிற 9-ந் தேதியன்று (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது வினியோக திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரேஷன் கடைகளில் பொருள் பெற நேரில் வரமுடியாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும்.
பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 19 மண்டல அலுவலக பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்." இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications