அரிசி குடும்ப அட்டைதாரர்களே.. இனிமேல் நிம்மதி.. தமிழக அரசின் அடுத்த அதிரடி.. பெருகுகிறது நம்பிக்கை
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக அரசு இன்னொரு அதிரடியை கையில் எடுக்க போகிறதாம்.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

அதுமட்டுமல்ல, விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
பண்டிகை சீசன்: இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம். பொதுமக்களின் நன்மைக்காக இப்படி பல்வேறு அதிரடிகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில், இன்னொரு முன்னெடுப்பையும் தமிழக அரசு செய்துள்ளது.
அதன்படி, இன்னும் 2 மாதங்களில் கருவிழி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வரப்போகிறதாம்.. இதுகுறித்து கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்திருந்தார்.
கருவிழி: அப்போது அவர் சொன்னபோது, "பயோ மெட்ரிக் உடன், கண் கருவிழி பதிவு மூலம் பொருட்களை பெற சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பெரம்பலூர் பகுதியில் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் மூலமாக ரேஷன் பொருட்கள் பெற அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு உள்ளது. விரைவில் இந்த திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, இதுகுறித்து கூடுதல் ஒன்றை வெளியிட்டுள்ளார். "ரேஷனில் விரல் ரேகை பதிவு செய்து, பொருட்களை வாங்கும் நடைமுறை உள்ளது.
நம்பிக்கை: முதற்கட்டமாக, கருவிழியை பதிவு செய்து, ரேஷன் பொருட்கள் பெறும் நடைமுறை, 36,000 ரேஷன் கடைகளிலும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.. இன்னும் 2 மாதங்களில், தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகளிலும், இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்" என்று உறுதிபட தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications