"பிரிச்சி போடு".. ரேஷனில் புது மாற்றம்.. போட்டாச்சு ரசீதுகள்.. மிஷின்களும் ரெடி.. நிம்மதியில் மக்கள்
சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் வரப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி உணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்கடி செயலிழந்து விடுவதால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் ஆங்காங்கே கிளம்பின.. அதனால்தான், தமிழகத்தின் ரேஷன் கடைகளில், கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
ரேஷன் கடைகள்: எப்படியும் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகளை அடுத்த சில தினங்களில் துவக்க போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் முறைகேடுகளையும் தடுக்க அரசு முனைப்பு காட்டி வருகிறது.. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய PoS 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும் விற்பனை முனையக் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குடும்பத்தில் உள்ள நபர்களில் ஒருவரது கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கைரேகை: கார்டுதாரரின் கைரேகை பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டுதுமே, இந்த கருவியில் பதிவு செய்யப்படும்.. பிறகு, விற்பனை விபரம் அனைத்தும் கார்டுதாரர் மொபைல் போன் எண்ணுக்கு, மெசேஜ் மூலம் அனுப்பப்படுகிறது.
கை ரேகை பதியப்பட்டு, பொருட்கள் வழங்கப்படும்போது ரேஷன்தாரர்கள் கேட்கும் பொருள்களுக்கு மட்டுமே பில் போடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே பலமுறை அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும், சில இடங்களில் இந்த உத்தரவு செவிசாய்க்கப்படவில்லை... வாங்காத பொருட்களையும், வாங்கியது போல் பதிவு செய்து, சில கடை ஊழியர்கள் முறைகேடு செய்வதாக புகார்கள் கிளம்பின.
எச்சரிக்கை: அதனால்தான், இது தொடர்பாக பலமுறை துறைரீதியாக வார்னிங் தரப்பட்டது.. "வாங்காத பொருட்களை வாங்கியது போல் பில் போடப்பட்டதாகக் குறுஞ்செய்தி பெறப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்தால், கடை ஊழியர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு கருவி, பிரின்டர் வசதியுடன் கூடிய புதிய விற்பனை முனைய கருவி வைக்கும் பணி, இந்த மாத துவக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது..
ரசீது: இதனால், ரசீதை பார்த்து, வாங்கிய பொருட்களின் விபரத்தை கார்டுதாரர்கள் தெரிந்து கொள்ள முடியும்.. இப்போது, சென்னை உட்பட மாநிலம் முழுதும், 2,750 ரேஷன் கடைகளில் புதிய கருவிகள் வைக்கப்பட்டு உள்ளன. வரும் 2024 ஜூன் மாதத்திற்குள், எஞ்சியிருக்கும் 33,000 கடைகளிலும், அந்த கருவி வைக்கும் பணியை முடிக்குமாறு, தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம், உணவு துறை தெரிவித்திருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications