ரேஷன் கடைகளுக்கு பறந்த மேஜர் உத்தரவு.. தமிழக அரசின் இன்னொரு அதிரடி.. ஹப்பாடா.. நிம்மதியில் மக்கள்
சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.. இதையடுத்து, பொதுமக்களுக்கு நிம்மதியும் ஏற்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
சக்கரபாணி: அதேபோல, பொருட்கள் தரமானதாக இருக்கிறதா? ரேஷன்தாரர்களுக்கு முறையாக கிடைக்கின்றனவா? என்பது உட்பட ரேஷன் கடைகளில் தடையற்ற மற்றும் தரமான சேவையை வழங்க பல நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து இருக்கிறது. 2 நாட்களுக்கு முன்புகூட, அமைச்சர் சக்கரபாணி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
அதில், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை, கார்டுதாரர்களுக்கு உடனுக்குடன் வினியோகம் செய்ய வேண்டும்.. ஒருவேளை, அதன் தரம் குறைவாக இருந்தால், உடனடியாக கிடங்குகளுக்கு அனுப்ப வேண்டும்.. எக்காரணம் கொண்டும் பொருட்கள் தேங்கியிருக்க கூடாது என்றும் தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு காரணம், ரேஷன் கடையில் தேங்கியிருக்கும் பொருட்கள் குறித்து சில புகார்கள் எழுந்தன.. அதாவது, சிலர் தங்களது ரேஷன் அட்டைகள் மூலமாக வழங்கப்படும் பொருட்களை வாங்குவதில்லை என்றும், இதனால் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் மளிகை பொருட்கள் தேங்கி விடுவதால், அரசிற்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது என்று கூறப்பட்டன..
பெருத்த நம்பிக்கை: இத்தகைய புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே, அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.. இந்நிலையில், மற்றொரு அதிரடியை கையில் எடுத்துள்ளார் அமைச்சர்.
அதன்படி, கிடங்கிலிருந்து அத்தியாவசிய பொருள்கள் தரமாக பெறப்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும் என்றும் அதற்கு பிறகே பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்..
அடுத்த அதிரடி: மேலும், தரமற்ற பொருள்களை வழங்க கூடாது, பொது மக்களுக்கு பொது விநியோக திட்ட பொருள்களை விநியோகம் செய்யாமல் இருப்பதால் இறுதி இருப்பு அதிகளவில் காட்டப்படுகிறது, எனவே, அதிக அளவில் சரக்கு இருப்பு வைப்பதை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்றும் மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைதவிர, மேலும் சில உத்தரவுகள் அதிகாரிகளுக்கு பறந்துள்ளன.. குறிப்பாக, "ரேஷன் கடைகளில் காலதாமதமாக பொருட்கள் வழங்கப்படுவதாக புகார்கள் பெருகுவதால், மக்களுக்கு பொருள்களை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.. அதே போல 3 மாதத்திற்கு மேல் துவரம் பருப்பு இருப்பு உள்ள அங்காடிகளின் பட்டியல் MIS PORTAL -ல் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.. எனவே, அங்காடியில் தேக்கத்தில் உள்ள பொருட்கள் தரமற்றதாக இருந்தால் குடோனில் மாற்றி நடப்பு மாதமே விற்பனை செய்து விடுங்கள்..
பெருத்த நம்பிக்கை: விற்பனை செய்யும் பணியாளர்கள் பொதுமக்களிடம் கனிவாக பேச வேண்டும்... இது மிகவும் அவசியமான ஒன்று.. சமூக வலைதளங்களில் புகார்கள் வராத வண்ணம் கவனமுடன் பணியாற்ற வேண்டும்.. இதனை பொது விநியோக திட்ட கள அலுவலர்கள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. தமிழக அரசின் இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் ரேஷன்தாரர்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications