குடும்ப அட்டைதாரர்களுக்கு.. குட்நியூஸ் வருதா? ரேஷனில் இதெல்லாம் இலவசமா? தமிழக அரசு எடுக்கும் முடிவு?
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களும், மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு மெல்ல மீண்டு வருகிறார்கள்.. இந்நிலையில், தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புயல்: சென்னையை உலுக்கிஎடுத்து சென்ற மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மட்டுமல்லாமல் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்து தவித்து கொண்டிருக்கிறார்கள். எனவே, கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது
அதேபோல, பேய்மழை கொட்டியதில், தரைத்தளம் பகுதிகளில் குடியிருப்பவர்கள் வீடுகளில் எல்லாம் நீர் புகுந்துவிட்டது.. இதனால், பெரும்பாலான வீடுகளில் மின்சார சாதனங்கள், துணிகள், புத்தகங்கள், ஆவணங்கள் என பாழாகிவிட்டன..
4 மாவட்டங்கள்: இதில் ஏராளமான சான்றிதழ்கள் சரி செய்ய முடியாத அளவுக்கு நனைந்து சேதமடைந்து விட்டன. அதனால்தான், சென்னையில் நாளை முதல் 46 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதேபோல, மழைநீரில் சொத்து பத்திர ஆவணங்கள் நனைந்துவிட்டதால், நகல் ஆவணங்களை வழங்க பத்திரப்பதிவு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, புயல் பாதித்த 4 மாவட்டங்களிலும், மின் கட்டணம் செலுத்த, டிசம்பர் 18ம் தேதி வரை அவகாசம் தந்து, தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ரேஷனிலும் சிறப்பு சலுகையை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை கிளம்பி உள்ளது.
கடும் புயல்: தமிழக ரேஷன் கடைகளை பொறுத்தவரை, அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகின்றன. இதைத்தவிர 2 கிலோ சர்க்கரை, 50 ரூபாய்க்கும், துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும், பாமாயில் 25 ரூபாய்க்கும் என்ற குறைந்த விலைக்கு விற்கப்படுன்றன. இதனால், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் நேரடியாகவே பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த வாரம் வீசிய புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ள நீர் வீடுகளில் புகுந்தது. ஒருவாரம் கடந்தும்கூட, சென்னை புறநகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியவில்லை. இதனால், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் என்று பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் கடைகளில், அனைத்து பொருட்களையும் இலவசமாக வழங்குமாறு, தமிழக அரசுக்கு கார்டுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன்தாரர்கள்: இந்நிலையில், ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் 6000 ரூபாய் வெள்ள நிவாரணம் கிடைக்குமா? கார்டு இல்லாதவர்கள் என்ன செய்வது? என்ற குழப்பம் எழுந்தது..
ஆனால், சென்னையில் உள்ள அனைவருக்குமே வெள்ள நிவாரணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஒருவேளை கார்டு இல்லாதவர்கள், கேஸ் சிலிண்டர் ரசீது, வீட்டு வாடகை பத்திரத்தை பயன்படுத்தி வெள்ள நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications