ரேஷனில் மாற்றம்.. வந்தாச்சு மிஷின்.. "பில்" ரெடி.. குடும்ப அட்டைதாரர்கள் ஹேப்பி: பலே புதுக்கோட்டை
சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் வரப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி உணர்வு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அடிக்க செயல் இழந்து விடுவதால், பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் கிளம்பின.. அதனால்தான், தமிழகத்தின் ரேஷன் கடைகளில், கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

ரேஷன் பொருட்கள்: அதன்படி, வரும் ஜனவரிக்குள் 36 ஆயிரம் ரேஷன் கடைகளில், கருவிழிப்பதிவு மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகள், வரும் 2024ம் ஆண்டு ஜனவரி முதலே துவங்க போவதாகவும், அடுத்த 3 மாதத்துக்குள் மொத்த பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருந்தன.
இதற்கு நடுவில், உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட இணையதளத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகி விட்டதால், ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நிற்பதாக பகீர் புகார்கள் கிளம்பின..
புதிய கார்டுகள்: அதனால், ஒரு லட்சம் கார்டுகளை அச்சடிக்க நடவடிக்கை எடுத்து, புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்குமாறு தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும், இது தொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்களை அனுப்பி வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி, ரேஷன் கடைகளில் கருவிழியை ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேனர், ரசீது பிரின்டர் உள்ளிட்ட கூடுதல் வசதிகளுடன் விற்பனை முனையக் கருவி (பிஓஎஸ்) வழங்கப்பட்டுள்ளதாம்..
வயது முதிர்வு: அதாவது, விரல் ரேகை பதிவை கருவி ஏற்றுக்கொள்ளாததால் பொருள் விநியோகத்தில் சிரமம் ஏற்படுகிறது.. வயது முதிர்வின் காரணமாக சிலரது கைவிரல் ரேகை பதிவு செய்ய முடியாமலும் சிரமம் ஏற்படுகிறது.
நீண்ட நேரம் வரிசையில் கால் கடுக்க நின்றாலும், பொருள் வாங்கும் நேரத்தில் விரல் ரேகை பதிவில் பிரச்சினை, ஸ்மார்ட் கார்டில் உள்ள க்யூஆர் கோடு ஸ்கேன் ஆகவில்லை என்றெல்லாம் கூறி பொருட்களை விநியோகிக்க மறுத்துவிடுகிறார்களாம்.
இதனால், பணியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும் முற்றிவிடுகிறது. இதையெல்லாம் தடுக்கவே, புதுக்கோட்டை மாவட்டத்தில், மாற்று வழியாக கருவிழியை ஸ்கேன் செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகளுடன் கூடிய புதிய பிஓஎஸ் கருவி பரீட்சார்த்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக, இம்மாவட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ள நிலையில், பைலட் கடைகள் என்ற அடிப்படையில் பரீட்சார்த்த முறையில் 70 ரேஷன் கடைகளுக்கு இந்த கூடுதல் வசதிகளுடன் கூடிய பிஓஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில், 30 ரேஷன் கடைகளில் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, ரேஷன் கடைக்கு வருபவர்களில் குடும்ப அட்டை உறுப்பினர்கள் யாராக இருந்தாலும், அவர்களது கண் கருவிழியை அந்த ஸ்கேன் கருவியில் பதிவு செய்து வருகிறார்களாம்..
இதில் அவர்களது விவரம் வந்ததுமே, பொருட்களும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.. இப்போது இந்த பொருட்களுக்கு பில்லும் தரப்படுகிறதாம். விரைவில் இந்த திட்டம் அனைத்துக் கடைகளுக்கும் இந்த நவீனக் கருவி வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications