Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் + இபி + மெட்ரோ.. இப்போ "அதுலயும்" வருது பயோ மெட்ரிக்.. எல்லாமே டிஜிட்டல் ஆகுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முக்கியமாக சேவைகள் பல டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சிறை சாலையும் டிஜிட்டல் மயமாக மாறி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் கைதிகள் உணவு விடுதியில் 'பயோமெட்ரிக்' சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த முயற்சியின் கீழ், சிறை கேன்டீன்கள் பயோமெட்ரிக் அம்சங்களுடன் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறை கைதிகள் கேண்டினில் என்ன வாங்குகிறீர்கள்.. எவ்வளவு காசு கொடுத்து வாங்குகிறார்கள்.. முறைகேடாக பொருட்கள் விற்கப்படுகிறதா என்று கண்காணிக்கப்படும்.

Ration card + Metro trip + EB bill: No Jail also becoming Dgitalized, Bio Metric for inmates

கைதிகள் வாரத்திற்கு 750 முதல் 1,000 ரூபாய் வரை பொருட்களை வாங்கலாம். இதையும் பயோமெட்ரிக் கண்காணிக்க முடியும். அதேபோல் சிறை சாலையில் உணவு விடுதிக்கு முறையாக கைதிகள் செல்கிறார்களா என்றும் இதன் மூலம் கண்காணிக்கப்படும்.

டிஜிட்டல் சேவை: தமிழ்நாட்டில் முக்கியமாக சேவைகள் பல டிஜிட்டல் மயமாகி வருகிறது. இந்த நிலையில் தற்போது சிறை சாலையும் டிஜிட்டல் மையமாக உள்ளது. சமீபத்தில் ரேஷன் கடைகளிலும் ஆன்லைன் கட்டணம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதாவது பணமாக செலுத்தாமல் யுபிஐ மூலம் செலுத்த வேண்டும்.

ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் இந்த விநியோக முறையில் சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சுமார் 2.2 கோடி குடும்ப அட்டைகள் இருக்கிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பேர் பயனடைகிறார்கள். எல்லோருக்கும் இந்த புதிய வசதி கொண்டு வரப்படும். அரசின் குறிப்பிட்ட துறைகளில் உள்ள கஜானாவிற்கு நேரடியாக பணம் செல்ல இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. பண மோசடி, லஞ்சம் போன்றவை இதனால் கொஞ்சம் கொஞ்சமா குறையும்.

Ration card + Metro trip + EB bill: No Jail also becoming Dgitalized, Bio Metric for inmates

மின்சார கட்டணம்: இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் மின்சார கட்டணம் ரூபாய் 1000 அல்லது 2000 மேல் வந்தால் ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டணத்தை கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதில் 1000 ரூபாயா அல்லது 2000 ரூபாயா என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை., தற்போது 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் இருந்தால் அதை மின்சார நிலையங்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த முடியும்.

இனிமேல் மின்சார கட்டணம் ரூபாய் 2000க்கு மேல் வந்தால் அதை ஆன்லைன் மூலம் மட்டுமே கட்டும் முறையை கொண்டு வர தமிழ்நாடு மின்சார வாரியம் பரிசீலனை செய்து வருகின்றதாம்.மின்சார நிலையங்களில் கூடுதல் பணம் கையாள்வதை தவிர்க்கவும், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்கவும் இந்த முறையை கொண்டு வர மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளதாம்.

ஆனால் இன்னும் இந்த புதிய விதி நடைமுறைக்கு வரவில்லை. முறையான ஆலோசனைக்கு பின்பே இந்த விதி நடைமுறைக்கு வருவது பற்றி முடிவு எடுக்கப்படும்.

Ration card + Metro trip + EB bill: No Jail also becoming Dgitalized, Bio Metric for inmates

மெட்ரோ: இதையடுத்து தற்போது மெட்ரோவில் புதிய டிஜிட்டல் புரட்சி ஒன்று கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி மெட்ரோவில் வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி கொண்டு வரப்பட்டது. இதை ஒரு நாள் முழுக்க ஒரு முறை பயன்படுத்த முடியும். நீங்கள் பயன்படுத்தாத பட்சத்தில் உங்கள் நண்பர்களுக்கு வழங்க முடியும். பேடிஎம், ஏர்டெல் நிறுவனங்களில் செயலி மூலம் கூட வரும் காலங்களில் இந்த டிக்கெட் விற்பனை நடக்க உள்ளது.

இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் சென்னையில் மாநகர பஸ், மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிக்கும் வசதியை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த உள்ளது. இதற்கான சிங்கார சென்னை கார்ட் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.

பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும்.இப்படி மக்கள் பயன்படுத்தும் முக்கியமான துறைகளில் அதிரடியாக டிஜிட்டல் மயமாக்கல் மேற்கொள்ளப்பட்டு வருவது வரவேற்பை பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+