Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில்.. இந்த 2 பொருட்களுக்கு இனிமேல் சிக்கல்.. தமிழ்நாடு அரசு முக்கிய தகவல்.. காரணம் யார் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றினை தமிழக அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.. அதற்கான காரணங்களையும் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

Ration Holders: shortage of kerosene and wheat in ration shops, says minister sakkarapani

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.. அதேபோல, தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ1,06,20,066 மதிப்பிலான ரேஷன் கடை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்திருந்தது.

சக்கரபாணி: இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணி ஒரு பேட்டி தந்துள்ளார்.. அதில், சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அவர், "தமிழ்நாட்டிற்கு மத்திய அரசால், ஒதுக்கீடு செய்யப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு 2006ம் ஆண்டு ஏப்ரலில் மாதம் ஒன்றிற்கு 59,852 கிலோ லிட்டராக இருந்தது. இந்த ஒதுக்கீடு படிப்படியாகக் குறைக்கப்பட்டு 01.4.2021 முதல் மாதம் ஒன்றிற்கு 7536 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மறுபடியும் 01.4.2022 முதல் அதுவும் குறைக்கப்பட்டு மாதம் ஒன்றிற்கு 4520 கிலோ லிட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 01.4.2023 முதல் அதுவும் குறைக்கப்பட்டு தற்போது மாதம் ஒன்றிற்கு 2712 கிலோ லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதற்கு தமிழ்நாட்டில் எரிவாயு இணைப்பு அதிகமாக இருப்பதால் ஒதுக்கீடு குறைக்கப்படுவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் இராமேஸ்வர் தேலி பதில் கடிதம் எழுதியிருந்தார்.

மறுபடியும், 29.03.2023 அன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சர் ஹர்தீப்சிங் பூரிக்கு கடிதம் எழுதியுள்ளேன்... அதற்கு இன்னும் பதில் வரவில்லை. மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை பற்றாக்குறைக்கு காரணம் கடந்த ஆட்சியாளர்கள் உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் கையெழுத்திட்டது தான்.. எரிவாயு இணைப்பு அதிகம் உள்ள மாநிலம் என்பதால், தமிழகத்திற்கு மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து மத்திய அமைச்சரை சந்தித்து முறையிட போகிறோம்.

கேஸ் ஏஜென்சி: மண்ணெண்ணெய்க்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மானியம் முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்றாலும் ஒதுக்கீடு செய்வது மத்திய அரசாக இருப்பதால் ஒதுக்கீட்டை அதிகப்படுத்த ஒன்றிய அரசிடம்தான் கோரிக்கை வைக்க முடியும்.. சென்னையில் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டு குறைவால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டிற்கு, நம்முடைய சிவில் சப்ளைஸ் ஆணையர், காலையில் நேரடியாகவே சென்று கேட்டுள்ளார்.. அதற்கு அவர்கள், "கேஸ் ஏஜென்சிக்கு சென்று பணம் கட்டி சிலிண்டர் வாங்கக்கூடிய வசதிவாய்ப்பு எனக்கு இல்லை, மண்ணெண்ணெய் 2 லிட்டர் அல்லது 3 லிட்டர் கொடுத்தால் பரவாயில்லை" என்கிறார்களாம்..

அப்படி சொல்லுகின்ற நிலைமைக்கு இன்றைக்கு வறுமை கோட்டிற்குக் கீழே வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு அதையெல்லாம் பார்க்காமல் இன்றைக்கு தமிழகத்தில் 30 லட்சம் பேருக்கு மேல் எரிவாயு இணைப்பு இல்லை என்ற நிலையிலும் இந்த ஒதுக்கீட்டை குறைத்திருப்பது மிகவும் வருத்தம் தருகிறது.

ஏற்காடு, ஊட்டி: மலைப்பகுதிகளில் அதிகம் பேர் மண்ணெண்ணெய் வைத்துதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். அதே மாதிரி கடந்த காலத்தில் எல்லாம் மாநகராட்சிக்கு இவ்வளவு ஒதுக்கீடு, நகராட்சிக்கு, பேரூராட்சிக்கு கொடைக்கானல், ஏற்காடு மலை, ஊட்டி போன்ற பகுதிகளுக்கெல்லாம் இவ்வளவு இவ்வளவு ஒதுக்கீடு என்று ஏற்கனவே ஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு அந்த ஒதுக்கீடெல்லாம் செய்ய முடியாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். மண்ணெண்ணெய் ஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மண்ணெண்ணெய்: இன்றைக்கு பொருளாதார நெருக்கடி இருந்தாலும், நிதி சுமை இருந்தாலும், தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுடைய நலன் கருதி பொது விநியோகத் திட்டத்தில் இன்றைக்கு துவரம்பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற பொருட்களையெல்லாம் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.. அதனால், மண்ணெண்ணெய் தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் பருப்பு, ஆயில், இப்போது சர்க்கரை எல்லாம் நாங்கள் வாங்குவது போன்று, வாங்கி பொதுமக்களுக்கு எத்தனை லிட்டர் தேவையோ அத்தனை லிட்டர் கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

ஆனால், மத்திய அரசு அனுமதி வழங்கினால்தான் மண்ணெண்ணெயைக் கொடுக்க முடியும். ஏனென்றால் பெட்ரோலாக இருந்தாலும் சரி, டீசலாக இருந்தாலும் சரி, மண்ணெண்ணெயாக இருந்தாலும் சரி, எரிவாயு இணைப்பாக இருந்தாலும் சரி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காரணத்தால், இன்றைக்குப் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்" என்றார்..

மலைவாழ் மக்கள்: தொடர்ந்து செய்தியாளர்கள், ரேஷன் கடையில் இப்போது மண்ணெண்ணெயும் கோதுமையும் கேட்கின்ற அளவிற்கு கிடைக்காது என்றால், மலை கிராமங்களில் உள்ள சூழ்நிலைக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.. அதற்கு அமைச்சர், அதிகம் பேர் எரிவாயு இணைப்பு பயன்படுத்தி வரும் மாநிலம் தமிழ்நாடு என்பதால், அதனை குறைக்கிறோம் என்ற காரணத்தை சொல்கிறார்கள். இப்போது 30 லட்சம் பேர் எரிவாயு இல்லாமல்தான் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் 3 லிட்டர் கணக்கிட்டாலும், 9000 KL வருகிறது. இப்போது 2712 KL தான் கொடுக்கிறார்கள். மத்திய அரசு நம்மை வஞ்சிப்பதாகத்தான் நினைக்க வேண்டும் என்றார்..

உடனே செய்தியாளர்கள், அந்த 30 லட்சம் பேரை எரிவாயு இணைப்பாக மாற்ற முடியாதா என்று கேட்டார்கள்.. அதற்கு அமைச்சர், அவர்களை ஊக்குவித்துக் கொண்டிருக்கிறோம். இருந்தாலும், அவர்களுக்கு சிலிண்டர் வாங்குவதற்குப் பணம் வேண்டும் என்றார்.

முன்னதாக அமைச்சர் பேசும்போது, "முதலமைச்சருடைய அரசு பொறுப்பேற்ற பின்பு இந்த துறையின் சார்பாக பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நெல்மணி கூட மழையில் நனையக் கூடாது. நெல் வாங்கினால் உடனே அரைத்து அதை பொதுமக்களுக்குத் தரமான அரிசியாக கொடுக்க வேண்டும் என்று கூறியதால் 376 அரவை ஆலைகள் இருந்ததை, இப்பொழுது 745 அரவை ஆலைகளாக நாங்கள் உயர்த்தியிருக்கிறோம்.

கருப்பு பழுப்பு அரிசி: அனைத்து ஆலைகளிலும் கருப்பு பழுப்பு இல்லாத அரிசியாக கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து அந்த அரிசியும், பாமாயில் ஆக இருந்தாலும் சரி, பருப்பாக இருந்தாலும், சர்க்கரையாக இருந்தாலும், சிவில் சப்ளை கிடங்கிற்கு வரும்போது அதை கண்காணிக்கும் அதிகாரியாக மாவட்ட வழங்கல் அலுவலர், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகத்தின் RM. SRM, தரக்கட்டுப்பாட்டு அதிகாரி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் நான்கு பேர் கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டு, பொருட்கள் அரவை ஆலையில் இருந்து வந்தாலும் சரி, வேறு எங்கிருந்து வந்தாலும் சரி, வியாபாரிகளிடத்திலிருந்து வந்தாலும் தரமான பொருட்களைத் தான் வாங்க வேண்டும் மற்ற பொருட்களை வாங்கக் கூடாது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+