ரேஷனில் வருது மாற்றம்.. தரமான சம்பவம்.. மொத்தம் 5784 ரேஷன் கடைகளாம்.. காரணமே ஐஏஎஸ் ராதாகிருஷ்ணன் தான்
சென்னை : ரேஷன் கடைகள், புதுப்பொலிவுடன் காட்சி தந்து வருகின்றன.. விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளும் சீரமைக்கப்பட்டு, பளீச் லெவலுக்கு மாறிவிடும் என்கிறார்கள்.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..
இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது..
நம்ம ரேஷன் கடை: இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2022 ஆகஸ்டில், மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, "நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" என்ற புதிய முயற்சியை, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கியுள்ளார்.. இந்த திட்டத்தின்படி, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து, ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான கடைகள் செயல்படும் கட்டடங்கள், பாழடைந்து காட்சி அளிப்பதால், அவைகள் புதுப்பொலிவுடன் தயாராகி வருகின்றன. இந்த கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்வுத்தள வசதி, முதியோர் அமர ஓய்விருக்கை போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது.. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால் ரேஷன் கடைகளுக்கு வரும் பயனாளிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதைவிட சிறப்பம்சமாக, ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று கிடைத்து வருகிறது...
தலா 75 கடைகள்: அதன்படி, முதல் கட்டமாக, மாவட்டத்திற்கு தலா, 75 கடைகள் தேர்வு செய்து சீரமைக்கப்பட்டு, 'பளீச்' வண்ணத்திற்கு மாற்றப்பட்டன. மேலும், அந்த கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இதுவரை மொத்தம் 2,975 கடைகள் புதுப்பொலிவுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.
சபாஷ் ராதாகிருஷ்ணன்: ராதாகிருஷ்ணன் எடுத்த முயற்சியால், இப்போது 3,000 ரேஷன் கடைகள் புதுப்பொலிவுக்கு மாறிய நிலையில், 5,784 கடைகளுக்கு சர்வதேச தரச்சான்று கிடைத்துள்ளது. மொத்தத்தில் தரத்தை வெளிப்படுத்தும் பிரிவில், 3,753 கடைகளுக்கும், பாதுகாப்பு மேலாண்மை பிரிவில் 2,031 கடைகளுக்கும் சர்வதேச தரச்சான்றுகள் பெறப்பட்டுள்ளன. ...
இதற்கெல்லாம் முக்கிய காரணம், பணிகளின் நிலை குறித்து, மண்டல இணை பதிவாளர்களிடம், ராதாகிருஷ்ணன் தினமும் அறிக்கை கேட்டு பெற்றதுடன், தொடர் ஆய்விலும் ஈடுபட்டதும்தான்.. விரைவில் மற்ற கடைகளுக்கும் தரச்சான்று கிடைத்துவிடும் என்கிறார்கள் அதிகாரிகள்..!!
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications