ரேஷன் அட்டைதாரர்களின் குமுறல்.. ரேஷனில் புதுஸா வந்த சிக்கல்? சர்வர் வேற ஸ்லோ.. அரசுக்கு கோரிக்கை
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் புகார்கள், முறைகேடுகள், கோரிக்கைகளை தமிழக அரசு நிவர்த்தி செய்து வருகின்றன. எனினும், ஆங்காங்கே சில ரேஷன் கடைகள் குறித்து, குடும்ப அட்டைதாரர்கள் புகார்கள் கூறுகிறார்கள். ஒருசில இடத்தில் சர்வர் பிரச்சனை உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசுக்கு 2 விதமான வேண்டுகோள்களை பொதுமக்கள் விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்காகவே, அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால், ரேஷன்தாரர்களின் இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே அலர்ட் செய்யப்பப்ட்டிருந்தது.

குடும்ப உறுப்பினர்கள் பதிவு
அதேபோல, ஆதார் எண்ணுடன் கைரேகை, கருவிழி பதிவு செய்து, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையை மே 31க்குள் பதிவு செய்ய வேண்டும். இதை வைத்துதான், அரிசி, பிற மானியத்தை மத்திய அரசு நிர்ணயம் செய்து மாநில அரசுக்கு வழங்கும். இதற்கான கைரேகை பதிவு அனைத்து ரேஷன் கடைகளிலும் நடந்து வருகிறது.
ஆனால் சில விற்பனையாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்ய சென்றால் பொருட்கள் ஸ்டாக் இல்லை, நாளைக்கு வாங்க என்று திருப்பி அனுப்புகிறார்களாம்.
கைரேகை - ஆதார் அட்டை
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஆதார் அட்டையுடன் ரேஷன் கடையில் பதிவு செய்தால் தான் ஆதார் பதிவு செய்யப்பட்டது என்பது உறுதியாகும்.. அப்படியிருக்கும்போது, குடும்ப உறுப்பினர்களால், தினமும் வந்து செல்ல முடியாத சூழல் உள்ளது.. இதனால், கைரேகை பதிவும் தவறவிடும் நிலைமை வருகிறது" என்று பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து பொது விநியோகத்துறை தரப்பில் சொல்லும்போது, "கைரேகை விழாவிட்டால் குறைந்தது கருவிழி ரேகையை பதிவு செய்ய வேண்டியது விற்பனையாளரின் கடமை... இதுகுறித்து தாசில்தார்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும், ரேஷன் அட்டைதாரரை அலையவிடும் விற்பனையாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.. கார்டுதாரர்கள் தாமதமின்றி தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டையோடு சென்று விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும்" என்கிறார்கள்.
பிஎஸ்ஓ மிஷின்கள்
இதற்கு நடுவில், சில ரேஷன் கடைகளில், சர்வர் பிரச்னையால், விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படவில்லையாம்.. இதனால் ரேஷன்தாரர்களுக்கு உடனுக்குடன் பொருட்கள் வழங்க முடியவில்லை என்ற புகார் வெடித்துள்ளது..
இதற்காக கார்டுதாரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலைமை வந்துவிடுவதால், ஊழியர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்தும் நிலைமை ஏற்படுகிறதாம். எனவே, உயரதிகாரிகள் கவனம் செலுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications