ஒரே போடு போட்ட ஸ்டாலின்.. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. தமிழக அரசு அதிரடி..!
ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னை: எப்படி தவறு ஏற்பட்டது, எங்கு தவறு ஏற்பட்டது, உடனே தெரிந்தாக வேண்டும் என்று பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் புகார்கள் குறித்து உத்தரவிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.. இப்போது அந்த கறுப்பு ஆடு சிக்கிவிட்டது.. பொங்கல் தொகுப்பு பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதாக அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி காட்டி உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது..
ஆனால், அந்த பரிசுதொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் வந்து கொண்டிருந்தது.. அந்த விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை என்றும் புளியில் பல்லி இருக்கிறது என்ற பகீர் குற்றச்சாட்டுகள் பரவலாக எழுந்தன.

அதிருப்தி
ஏற்கனவே பொங்கல் பணம் இல்லை என்ற ஆதங்கத்தில் மக்கள் அதிருப்தியில் இருந்தபோது, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான குற்றச்சாட்டுகள் மேலும் அதிருப்தியை பெருக்கி, விமர்சனங்களையும் உருவாக்கியது.. போதாக்குறைக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று, எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறி, திமுகவையே திணறடித்துவிட்டார்.

ஸ்டாலின்
அதனால்தான், இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக அக்கறை காட்டினார்.. அதிகாரிகளுடன் ஆலோசனையையும் கடந்த வாரம் நடத்தினார்.. பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்க அறிவுறுத்தினார்.. தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது என்று கண்டிப்பு தெரிவித்தார்.. பொருட்களின் தரம் குறித்த புகார்கள் வந்ததை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஸ்டாலின் டிஸ்மிஸ்
அதன்படியே, சில இடங்களில் கொள்முதல் செய்த பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதில் மெத்தனமாக செயல்பட்டதாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணி இடைநீக்கம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.. அன்று முதல்வர் போட்ட போடில் ஒருவர் சிக்கினார்.. இது தொடர்பாக மேலும் சில அதிகாரிகள் சிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அதுமட்டுமல்லாமல், நியாயவிலை கடைகளில் குடிமைப்பொருள் விநியோகம் செய்யப்படுவதை பல மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்களே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தும் வருகின்றனர். இந்நிலையில் பரபரப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது..

பறந்த உத்தரவு
நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து நியாயவிலை கடைகளுக்கு அனுப்பப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பது அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும், அதை சம்பந்தப்பட்ட ஊழியர்களே உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது... அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளில் நடத்தப்படும் ஆய்வின்போது காலாவதியான பொருட்கள் உள்ளதா? என்பதையும் கட்டாயம் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications