ரேஷன் அட்டைதாரர்களே.. ரேஷன் பொருட்கள் குறித்து மேஜர் தகவல்.. தமிழ்நாடு அரசு அதிரடி.. அதென்ன "கோடு"
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு பல்வேறு அதிரடிகளை தமிழ்நாடு அரசு செய்து வரும்நிலையில், இன்னொரு மாற்றத்தையும் நடைமுறைப்படுத்த துவங்கி உள்ளது..
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர் பெரிய கருப்பன் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, "திமுக அரசு 3-ம் ஆண்டில் அடிெயடுத்து வைத்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ரேஷன் அட்டைதாரர்கள்: அத்துடன் மக்களுக்கு தேவையான பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கடைகளில் கியூ.ஆர்.கோடு மூலமும் பணம் செலுத்தும் முறை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சோதனை முறையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 3 மாதங்களில் தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
பழங்காலத்தில் சிறுதானியங்களை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் மறந்து விட்டனர். ஆனாலும் இப்போது டாக்டர்கள் அறிவுரையின் பேரில் மீண்டும் சிறுதானியத்தின் பக்கம் மக்களின் கவனம் திரும்பி உள்ளது. இந்த ஆண்டு சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
ரேஷன் கடைகள்: ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்கும் திட்டம் தற்போது சோதனை முறையில் நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவாக தமிழகத்தில் சிறுதானியங்களின் உற்பத்தி குறைவாக உள்ளது. கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்துதான் சிறுதானியங்களை வரவழைக்கிறோம். எனவே இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு படுத்துவதற்கு தேவையான அளவு சிறுதானியங்கள் கையிருப்பு வேண்டும். அதன்பிறகுதான் இந்த திட்டத்தை விரிவுபடுத்தி செயல்படுத்த முடியும். எதிர்காலத்தில் இந்த திட்டம் அனைத்து கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும்" என்றார்.

கியூ ஆர் கோடு என்றால் என்ன: இந்த கியூ ஆர் கோடு என்பது என்ன?ஆதார் கார்டுகளிலும்கூட, இந்த க்யூ ஆர் கோடு இருக்கும்.. ஆனால், இது நம் கண்களுக்கு தெரியாது.. QR என்பது Quick Response என்பதின் சுருக்கம் ஆகும்.. இது ஜப்பான் நாட்டில் தோன்றி இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையாக மாறிவிட்டது..
இவற்றில் உள்ள குறியீடுகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சரங்களின் வரிசையை கொண்ட இயந்திரம், படிக்கக்கூடிய குறியீட்டில் இருக்கும், இந்த QR Codeல் இணையதள முகவரி, மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் போன்வற்றை மறைக்குறியாக்கம் செய்யலாம். பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள்வரை க்யூ.ஆர் கோடு அட்டையில் வாடிக்கையாளர்கள் பணத்தை செலுத்தும் முறையை பின்பற்றுகின்றன.
ஸ்கேனிங் முறை: க்யூ.ஆர் கோடு என்பது வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை உடனடியாக செலுத்துவதற்கான வசதியாகும்.. (Quick Response). ஸ்மார்ட்போனில் பதிவு செய்யப்பட்ட வங்கிக்கணக்கில் இருந்து, யாருக்கு பணம் செலுத்தவேண்டுமோ, அவர்களின் க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்து பணம் அனுப்பும் முறை ஆகும். இந்த முறை வந்தபிறகு, எப்போதும் கையில் பணம் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.
எனினும், இந்த க்யூ.ஆர் கோடு ஸ்கேன் முறையிலும் மோசடிகள் நடப்பதால், சந்தேகம் இருப்பவர்கள், யாரிடமாவது கருத்துக்கேட்டு இதுபோன்ற பணப்பரிமாற்றங்களில் ஈடுபடுவது நல்லது என்கிறார்கள் அதிகாரிகள்.
ரேஷனில் வருகிறது: நாடு முழுவதும், பணப்பரிமாற்றத்தை குறைத்து, என்ற முறையில் பரிமாற்றத்தை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள் முயன்று வருகின்றன.. அதன் ஒரு நடவடிக்கையாகத்தான் தமிழகத்திலும், இந்த கியூ ஆர் கோடு அறிமுகப்படுத்தப்படுகிறது.. இந்த முறையைதான் ரேஷனில் அறிமுகப்படுத்தி உள்ளது, ரேஷன் அட்டைதாரர்களின் வசதிக்கு பெரிதும் உபயோகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications