வன்னியர் வாழ்வுரிமை சங்கம்! பாமகவுக்கு போட்டியாக புதிய அமைப்பு! யார் தலைவர்? என்ன பின்னணி?
சென்னை: பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் நீக்கப்பட்ட ரவி ராஜ் என்பவர் வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், கல்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிராஜ் , வன்னியர் சங்கத்தில் மாநில துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வன்னியர் சங்கத்தின் நிறுவனர் ராமதாஸ் ஒப்புதலுடன் வன்னியர் சங்கத் தலைவர் அருள்மொழி இந்த ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அடுத்த 2 நாட்களில் வன்னியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டது மட்டுமல்லாமல் ரவிராஜை மொத்தமாக கட்டம் கட்டி ஒதுக்கினார் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டு வருவதால், கட்சி மற்றும் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து அதிரடி ஆக்ஷன் எடுத்தார் ராமதாஸ்.
பா.ம.க., வன்னியர் சங்கம் மற்றும் துணை அமைப்பினர் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மூன்று மாத இடைவெளியில் தனியாக வன்னியர் வாழ்வுரிமை சங்கம் என்ற புதிய அமைப்பை தொடங்கி அரசியல் களத்தில் கவனம் ஈர்த்துள்ளார் ரவி ராஜ். மறைந்த காடுவெட்டி ஜெ.குருவின் படத்தை மட்டுமே ரவிராஜ் பயன்படுத்துகிறார். இதனிடையே இது பற்றி பாமக தரப்பில் நாம் விசாரித்த போது, ரவி ராஜ் நல்ல மனிதர் தான். மருத்துவர் ஐயா மீது பாசமாக இருந்தவர் தான். ஆனால் சற்று முன் கோபம் கொண்டவர். '' என்பதோடு முடித்துக் கொண்டனர்.
இதனிடையே ரவிராஜ் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மஞ்சள் படை அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications