The Greatest of all time: விஜய் படத்தின் தலைப்பில் சனாதனம்? எம்பி ரவிக்குமார் கேள்வி
சென்னை: The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா, காலம் மாறினாலும் இது மாறாது என்பதுதானே அதன் தமிழாக்கம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்பியுமான ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்பி டாக்டர் ரவிக்குமார் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விஜய் படத்தின் தலைப்பில் 'சனாதனம்'?

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?
'காலமெல்லாம் பெரியது இதுதான்' என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!
'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா?
எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே
(தொல்.சொல். 157)
என தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், விஜய்யின் கட்சி கொள்கையிலிருந்து இந்த தலைப்பு முரண்படுகிறது. எல்லா நேரங்களிலும் சிறப்பானது என இதுவரை யாரும் தலைப்பை வைக்கவில்லை. அப்படி என்றால் என்றுமே மாறாதது என்றுதானே விஜய் சொல்கிறார் என ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All the Time (GOAT) திரைப்படம் இன்றைய தினம் தமிழகத்தில் 750-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என அவரே சொல்லிவிட்டார். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறின. விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடுகிறது.
இதனால் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட் படத்துடன் கடைசி படம் என விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் ஒரு இடத்தில் கூட இந்த படத்தை தனது அரசியல் பேசும் களமாக விஜய் மாற்றவில்லை என்கிறார்கள்.
இதை வெங்கட் பிரபுவே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் CM 2026 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தை விஜய் ஓட்டுகிறார். அதை பார்த்த விஜய், வெங்கட் பிரபுவிடம், "என்ன இதுல ஏதாவது உள்குத்து இருக்கிறதா" என கேட்டாராம். அதற்கு வெங்கட் பிரபு, "இல்லை தானாகவே நடந்தது" என்றாராம்.
இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த மக்கள் கோட் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்கள். நிறைய சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் இயக்கம் நன்றாக இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் இது குறித்த வெங்கட் பிரபுவிடம் கேட்ட போது, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வரலாம், வராமலும் போகலாம் என பூடகமாகவே பேசியிருந்தார். 25 வயது இளம் தோற்றத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் விஜய் தோன்றுகிறார். அதாவது இரட்டை வேடம் என்கிறார்கள். மூன்று வேடம் என்கிறார்கள்.
எல்லாவற்றையும் விட விஜயகாந்தின் காட்சிகள் படத்தின் ஆரம்பத்திலேயே வருகிறதாம். இந்த காட்சிகளால் விஜயகாந்த் ரசிகர்களும் விஜய்யை பாராட்டி வருகிறார்கள்.

-
விஜய் அதிரடி.. தமிழக தனியார் பள்ளிகளுக்கு ₹3 லட்சம் அங்கீகார கட்டணம் ரத்தா? உண்மை என்ன? -
"சுடுகாடு பக்கத்துல டாஸ்மாக் வையுங்க CM சார்!" – விஜய்யிடம் பார்த்திபனின் 'சைக்கலாஜிக்கல்' அஸ்திரம் -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அதிமுக எம்எல்ஏக்கள் ரோட்டில் நிற்கிறார்கள் தெரியுமா? தவெகவை வெளுத்த டிடிவி தினகரன்! -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மகாராஷ்டிராவை பாருங்க.. தமிழ்நாட்டிலும் இதேமாதிரி செய்யனும்! விஜய்க்கு ஐடியா கொடுத்த அன்புமணி ராமதாஸ் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட் -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இவ்வளவு ஆதரிச்சதே அதிகம்.. இன்னும் கொஞ்சம் வேணுமாம்! அரசியல் பேரிடர்.. விஜய்யை இறங்கி அடித்த சீமான்












Click it and Unblock the Notifications