இத்தனை லட்சமா? மகாலட்சுமியின் மாத வருமானம் இவ்வளவா! ரவீந்திர் திருமணத்திற்கு பின் வெளியான சீக்ரெட்
சென்னை: நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காசுக்காக திருமணம் செய்து கொண்டதாக நெட்டிசன்கள் பலரும் தேவையின்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.
விஜே மகாலட்சுமி. தயாரிப்பாளர் ரவீந்திர் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். ரவீந்தர் படம் தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறார்.
முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். அதோடு சில யூ டியூப் சேனல்களில் இவர் வீடியோ வெளியிட்டும் வருகிறார். ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

விமர்சனம்
இந்த நிலையில் மகாலட்சுமி ரவீந்தரை காசுக்காக திருமணம் செய்து கொண்டதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். ரவீந்தர் குண்டாக இருக்கிறார், அவரை ஏன் இந்த பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். எல்லாம் பணத்திற்காகத்தான், அவர் தயாரிப்பாளராக இருக்கிறார். அதனால்தான் மகாலட்சுமி திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு இருப்பார் என்று நெட்டிசன்கள் பலர் கொச்சையாக கமெண்ட் செய்து வருகிறார்.

பதிலடி
நெட்டிசன்கள் சிலரின் இந்த கமெண்ட் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. அந்த பெண் யாரை திருமணம் செய்தால் என்ன? மகாலட்சுமி ரவீந்தரை காசுக்காக திருமணம் செய்தார் என்று விமர்சனம் வைப்பது தவறு. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அது பர்சனல். இதில் எல்லாம் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க கூடாது, என்றும் சில நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மகாலட்சுமி
இந்த நிலையில்தான் மகாலட்சுமி மாத வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் 20 வருடங்களுக்கு மேலாக மீடியாவில் இருக்கிறார். முன்பு சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். அதன்படி இவர் இரண்டு பிரைம் டைம் சீரியல்களில் நடித்து வருகிறார். அதேபோல் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். சில விளம்பரங்கள், நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார். இதன் மூலம் இவருக்கு மாதம் 3 -4 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைப்பதாக கூறப்படுகிறது.

மாத வருமானம்
மற்ற ஷோக்கள் மூலமும் இவருக்கு பல ஆயிரம் வருமானம் வருகிறது. இன்னும் சில படங்களில் இவர் கமிட் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போக இவரின் தந்தையும் சினிமாவில் பெரிய டான்ஸ் மாஸ்டராக உள்ளார். இவரின் தந்தை சங்கர் ஐயா பல்வேறு படங்களில் நடன பயிற்சி மாஸ்டராக இருந்துள்ளார். பாகுபலி, ஆர் ஆ,ர் பொன்னியின் செல்வன் படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். இந்த நிலையில்தான் சுயமாக பணக்காரராக இருக்கும் மகாலட்சுமி காசுக்காக ஒருவரை போய் திருமணம் செய்து கொள்வாரா என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications