Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்பதானே திருமணம் ஆனது.. "இப்படி" போய் பேசலாமா? ரவீந்தர் - மகாலட்சுமி கல்யாணம்.. காசுதான் காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தயாரிப்பாளர் ரவீந்தர்- நடிகை மகாலட்சுமி திருமணத்தை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் இணையத்தில் அவர்களுக்கு எதிராக வன்மமான கருத்துக்களை வைத்து வருகின்றனர்.

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்த விஜே மகாலட்சுமி. அதன்பின் விஜே பணியில் இருந்து வெளியேற்றிவிட்டு சீரியலில் நடிக்க தொடங்கினார்.

தற்போது சன் டிவியில் வரும் பல்வேறு சீரியல்களில் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். முன்பே திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமி அதை விவாகரத்து செய்துவிட்டார்.

ரவீந்திரன்

ரவீந்திரன்

இந்த நிலையில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகனை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார். படம் தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்ட பணிகளை இவர் செய்து வருகிறார். முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை இவர் தயாரித்துள்ளார். அதோடு சில யூ டியூப் சேனல்களில் இவர் வீடியோ வெளியிட்டும் வருகிறார். ரவீந்தர் சந்திரசேகரனுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும்.

திருமணம்

திருமணம்

இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில்தான் அதை வைத்து நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். மகாலட்சுமி உடல் அமைப்பையும், ரவீந்தர் குண்டான தோற்றத்தையும் வைத்து கடுமையாக நெட்டிசன்கள் பலர் கிண்டல் வருகின்றனர். இது என்ன.. ரவீந்தர் அவ்வளவு குண்டாக இருக்கிறார். அவரை ஏன் மகாலட்சுமி திருமணம் செய்தார். பார்க்க ஜோடியே நன்றாக இல்லையே என்று விமர்சனம் வைத்து வருகின்றனர்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

இன்னொரு பக்கம் சிலர்.. இது மகாலட்சுமிக்கு இரண்டாவது திருமணம். இப்படி திருமணம் செய்வது தவறு. அவருக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையை பற்றி மகாலட்சுமி நினைத்து பார்த்தாரா? எப்படி அவர் இது போல இரண்டாவது திருமணம் செய்யலாம் என்று விமர்சனங்களை இன்னும் சில நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர். சரியாக திருமண ஆன நாளில் இருந்தே "இப்படி" வன்மமான கருத்துக்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.

கொடுமை

கொடுமை

இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் இது பணத்துக்காக நடந்த திருமணம். ரவீந்தர் தயாரிப்பாளர் என்பதால் அவரை மகாலட்சுமி திருமணம் செய்து கொண்டார் என்று கொச்சையாகவும் சிலர் பேசி வருகின்றனர். இந்த சமூக வலைதள டிரெண்ட் தவறானது அதோடு ஆபத்தானது. இரண்டு பேரின் திருமணம் என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். இதில் அவர்களின் குடும்பமே தலையிட முடியாது. இரண்டு பேருமே விவாகரத்து செய்துவிட்டதால் சட்டப்படி அவர்கள் திருமணம் செய்ய முடியும்.

காசுக்காக நடந்ததா?

காசுக்காக நடந்ததா?

அப்படி இருக்கும் போது அவர்களுக்கு குழந்தை இருக்கா இல்லையா என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. இதில் நெட்டிசன்கள் கருத்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இன்னொரு பக்கம் அந்த பெண் காசுக்காக திருமணம் செய்ததாக மோசமான விமர்சனங்களை வைப்பதும் மிக மிக தவறான கண்ணோட்டம். அந்த பெண்ணை திருமணம் செய்யும் அவருக்கு இல்லாத அக்கறை நெட்டிசன்களுக்கு ஏன்? அது அவர்களின் தனிப்பட்ட பர்சனல் விஷயம்.. காசுக்காகவே அவர் திருமணம் செய்து இருந்தாலும்.. பேச்சுக்கு அப்படி வைத்துக்கொண்டால் கூட இதில் நெட்டிசன்கள் கருத்து சொல்ல வேண்டியது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+