இஎம்ஐ கட்டலனா செல்போன் லாக் ஆகிடும்.! கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுவோருக்கு கிடுக்குப்பிடி போடும் ஆர்பிஐ
சென்னை: இந்தக் காலத்தில் இஎம்ஐ மூலம் பொருட்களை வாங்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இளம் தலைமுறையினர் தங்களுக்குத் தேவையான பெரும்பாலான பொருட்களை இஎம்ஐ மூலமாகவே வாங்குகிறார்கள். இதற்கிடையே இஎம்ஐ கட்ட தவறினால் செல்போனை லாக் செய்யும் திட்டத்தைக் கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால் பணத்தைச் சேர்த்து வைத்து வாங்குவார்கள். ஆனால், இப்போது அந்தக் காலம் எல்லாம் மாலை ஏறிவிட்டது. கிரெடிட் கார்ட்டை எடுத்துத் தேய்த்தோமா.. இஎம்ஐ-ல் பொருட்களை வாங்கினோமா என்றே பலரும் பொருட்களை வாங்குகிறார்கள்.

கடன் வாங்கி செல்போன்
நாம் ஒரு பிஸ்னஸுக்காக கடன் வாங்குவது வேறு.. சொந்தமாக யூஸ் செய்யக் கடன் வாங்கி பொருட்களை வாங்குவது என்பது வேறு.. பெரும்பாலும் இதுபோல சொந்த யூஸுக்காக கடனை வாங்கும் போக்கே அதிகரித்துள்ளது. இது சரியான போக்கு இல்லை என்றே வல்லுநர்கள் சொல்கிறார்கள். ஆனாலும் பலரும் இதுபோல இஎம்ஐ-இல் பொருட்களை வாங்குவதால் தான் முன்பெல்லாம் ஓரிருவரிடம் மட்டுமே இருந்த விலையுயர்ந்த செல்போன்கள் இன்று பெரும்பாலான மக்களிடம் சென்றிருக்கிறது.
இதுபோன்ற விலையுயர்ந்த செல்போனை வாங்குவது தவறில்லை. ஆனால், அதைக் கூட கடன் வாங்கி வாங்குவது தான் சிக்கலைத் தரும். தேவையோ இல்லையோ இதுபோல பலரும் ரூ.70,000, ஒரு லட்சம் என விலையுயர்ந்த செல்போனை இஎம்ஐ-இல் வாங்கிவிடுகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட சதவிகித மக்களால் இஎம்ஐ தொகையை முறையாகச் செலுத்த முடிவதில்லை. இதனால் அவர்கள் வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.
செல்போன் லாக்
இதற்கிடையே கடன் தவணைகளைச் செலுத்தத் தவறினால், இஎம்ஐ முறையில் வாங்கப்பட்ட மொபைல் போன்களை லாக் செய்யும் அம்சத்தைக் கொண்டு வருவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறதாம். சமீபத்தில் வட்டி விகிதம் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது இதை ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா உறுதி செய்தார். இதுபோல லாக் செய்யும் அம்சம் குறித்து ஆலோசித்து வருவதாக அவர் தெரிவித்தார். இது நடைமுறைக்கு வந்தால், தவணை செலுத்தாதவர்களுக்குச் சிக்கல் ஏற்படலாம்.
இப்போது கடன் வாங்கிய ஒருவர் குறிப்பிட்ட மாதங்களுக்கு மேல் கடன் தவணைகள் செலுத்தவில்லை என்றால் அந்த வாகனம் அல்லது வீட்டைப் பறிமுதல் செய்வார்கள். ஆனால், செல்போனுக்கு கடன் கட்டவில்லை என்றால் எதுவும் செய்ய முடியாமல் இருந்தது. அதை மாற்றவே இந்த புதிய முறையை ரிசர்வ் வங்கி கொண்டு வருகிறது.
என்ன காரணம்?
கடந்தாண்டு இந்தியாவில் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் வாங்கப்பட்டத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு இதுபோல இஎம்ஐ மூலமாகவே நடந்துள்ளதாம். சமீப காலமாக செல்போன் கடனைக் கட்டாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு தரப்பும் ரிசர்வ் வங்கியிடம் முறையிட்டுள்ளது. அதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எப்படி நடக்கும்?
இதற்காக ஒரு சாப்ட்வேரை உருவாக்கும் பணிகள் நடந்து வருகிறதாம். அதன்படி புதிதாக ஒருவர் இஎம்ஐ மூலம் செல்போன் வாங்குகிறார் என்றால் அவரது செல்போனின் இந்த சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்துவிடுவார்கள். அந்த நபர் குறிப்பிட்ட காலத்திற்கு இஎம்ஐ கட்டவில்லை என்றால் இந்த சாப்ட்வேர் மூலம் செல்போன் லாக் செய்யப்படும். இதுபோல லாக் செய்யும்போது செல்போனில் இருக்கும் தனிப்பட்ட டேட்டா அல்லது இதில் இருக்கும் பிற கண்டெண்டுகளை கடன் வாங்கியவரால் அணுக முடியாதாம்.
தனியுரிமை
அதேநேரம் இதில் தனியுரிமை தொடர்பாகவும் சில கேள்விகள் எழுந்துள்ளன. இதுபோல லாக் செய்யும்போது அதில் இருக்கும் தனிப்பட்ட டேட்டா தவறான முறையில் பயன்படுத்தப்படாது என்பது உறுதி செய்ய வேண்டும். மேலும், செல்போன் வாங்கும்போதே இதைத் தெளிவாகச் சொல்லி கடன் வாங்குவோரின் முன் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் திட்டம் இப்போது பரிசீலனையில் மட்டுமே இருந்தாலும் இது அமலுக்கு வரும்போது பேசுபொருளாகும் என்பதில் சந்தேகமே இல்லை.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications