தங்க கடன், கார், பைக் லோன் எடுக்க போறீங்களா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. கவனம்
சென்னை: வாகனக் கடன்கள் மற்றும் தங்க நகைக் கடன்கள் போன்ற பிரிவுகளில் செயல்படும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான (NBFCs) வளர்ச்சி பிரகாசமாக இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது அதிகாரபூர்வ வங்கிகள் இல்லாமல் பைனான்ஸ் துறையில் செயல்படும் நிறுவனங்களில் வாகன மற்றும் தங்க கடன் வழங்கும் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படுவதாக ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.
வாகன விற்பனையில் ஏற்பட்ட முன்னேற்றமும், தங்கத்தின் விலை உயர்வும் இதற்கு முக்கியக் காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவதாக ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. உள்கட்டமைப்பு, வாகனங்கள், வீடுகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் போன்றவற்றுக்கு நிதி வழங்குவதன் மூலம், இவை ஒட்டுமொத்த தேவையை அதிகரிக்கின்றன, வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன, மேலும் பொருளாதார விரிவாக்கத்திற்கு பங்களிக்கின்றன.
பொருளாதார விரிவாக்கம்
குறிப்பாகத் தொழில் லோன் மற்றும் சில்லறை வணிகத் துறைகளுக்கான லோன் வழங்குவதில் NBFC-களின் பங்கு அதிகரித்து வருவது. முக்கியமாக தங்க லோன் நிறைய பேர் எடுக்கிறார்கள். கார், பைக் லோன் எடுக்கிறார்கள். இதனால் பைனான்ஸ் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைய தொடங்கி உள்ளன என்று ஆர்பிஐ கூறி உள்ளது.
சமீபத்தில்தான் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சார்பாக தங்க கடன் வழங்குவது தொடர்பான புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகளை வெளியிடப்பட்டது. இதனால் தங்க லோன் வழங்குவதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.
நாட்டில் உள்ள பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன்களை வழங்குகின்றன. தங்கக் கடனின் கீழ் கிடைக்கும் கடன் தொகை உங்கள் தங்கத்தின் தூய்மை மற்றும் அளவைப் பொறுத்தது.
பொதுவாக, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் உங்கள் தங்கத்தின் மொத்த மதிப்பில் 75 சதவீதம் வரை கடனாக வழங்குகின்றன. ஆர்பிஐ புதிய விதிகளின்படி அதிகபட்சம் 75% தான் கடன் வழங்கப்படும். உதாரணமாக, உங்களிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1,00,000 எனில், ரூ.75,000 வரை தங்கக் கடன் பெறலாம். தங்கக் கடனுக்கான தற்போதைய வட்டி விகிதங்கள் 8 சதவீதத்தில் இருந்து தொடங்கி 24 சதவீதம் வரை செல்லலாம். இது தவிர, வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் தங்கக் கடனுக்கான செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கின்றன.
உங்களிடம் 5 கிராம் 24 காரட் தங்கம் இருந்தால், ரூ.30,350 வரை கடன் பெறலாம். அதேபோல், 5 கிராம் 22 கேரட் தங்கம் இருந்தால், ரூ.27,820 வரை கடன் பெறலாம். 5 கிராம் 20 காரட் தங்கம் இருந்தால் ரூ.25,290 வரையிலும், 5 கிராம் 18 காரட் தங்கம் இருந்தால் ரூ.22,760 வரையிலும் கடன் பெறலாம். 5 கிராம் தங்கத்தின் தூய்மையை பொறுத்து இந்தக் கடன் தொகை சற்று மாறுபடலாம் என்று உங்களுக்குச் சொல்கிறோம்.
தங்க கடன் மாற்றம்
வங்கிகள், NBFCகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (RRBs) போன்ற அனைத்து கடன் வாங்குபவர்களும் தங்க கடன் கொடுக்கும் போது இந்த விதிகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய கடன் வழங்கும் நடைமுறைகளில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்யவும், வேகமாக பாதுகாப்பாக கடன்களை வழங்கவும் வசதியாக இந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறி உள்ளது.
தங்கக் கடன் விதிமுறைகள் கடனளிப்பவரின் risk managementஐ அடிப்படையாக வைத்தே வழங்கப்பட வேண்டும். தங்கத்தின் மதிப்பு எப்படி உள்ளது, அதன் தூய்மை எப்படி உள்ளது என்பதை மதிப்பிட வேண்டும்.. அதை மதிப்பிட்ட பின்பே தங்க கடன் வழங்கப்பட வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. முறையான கடன் மதிப்பீடு செய்த பின்பே தங்க கடனை வழங்க வேண்டும். கடன் வழங்குபவர்கள் தங்கத்தின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும். திருட்டு நகைகள் அடகு வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தங்க நகை கடன் புதுப்பித்தல்கள் மற்றும் டாப்-அப்கள் தங்க நகையின் மதிப்பிற்குள் இருந்தால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications