ஏடிஎம்களில் சூப்பர் மாற்றம்.. தெய்வமே இங்கேயும் வந்துட்டீங்களா.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை, கோவை, பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய எல்லா பெரிய நகரங்களிலும், ஏன் சிறிய நகரங்களில்கூட உள்ள பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடியும் என்கிற நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு கீழ் உள்ள 200, 100 ரூபாய் நோட்டுகளை இருப்பது இல்லை என கூறப்படுகிறது. ஏதாவது ஒரு சில ஏடிஎம்களில் தான் 100, 200 நோட்டுகள் வருகின்றன. இந்நிலையில் ஏடிஎம்களில் கண்டிப்பாக 100, 200 ரூபாய் நோட்டுகள் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள பலருக்கும் சம்பளக்கணக்கு ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி உள்பட சில குறிப்பிட்ட தனியார் வங்கிக்கணக்கில் தான் இருக்கும். அதேபோல் அரசு ஊழியர்கள் என்றால், எஸ்பிஐ, கனரா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட சில பொதுத்துறை வங்கிகளில் தான் வரும்.

வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் மொத்தமாக சம்பளத்தை எடுக்க முடியாது. 10000, 10000 ரூபாய் ஆகவே எடுக்க முடியும். அதிகபட்சம் ஐந்து முறை மட்டுமே இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். அதாவது அதிகபட்சமாக 50000க்கு மேல் ஏடிஎம்களில் இலவசமாக எடுக்க முடியாது. அதற்கு கட்டணமாக 23 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வேறு வங்கி ஏடிஎம்களில் என்றால் 3 முறைக்கு மேல் இலவசமாக எடுக்க முடியாது. மக்களுடைய சம்பளத்தை எடுக்க கட்டணமும், அதற்கு தனியாக ஜிஎஸ்டி வரியும் விதிக்கப்படுகிறது.
அதேநேரம் அப்படி கட்டணம் வசூலிக்கும் வங்கிகள் ஏடிஎம்களில் சரியான முறையில் பணத்தை நிரப்புகிறார்களா என்றால், நிச்சயம் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் நாட்டின் பெரும்பாலான வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் வெறும் ரூ.500 நோட்டு மட்டும் தான் எடுக்க முடிகிறது. அதற்கு கீழ் உள்ள தொகையினை கேட்டால் ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் இல்லை என்று தான் வரும்.
அதனால் ஏழை-எளிய மக்கள் 100 ரூபாய், 200 ரூபாய் எடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது கணக்கில் இருக்கும் சிறிய தொகையை அவசரத்திறகு கூட எடுக்க முடியவில்லை. இதுகுறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகளவில் புகார்கள் பறந்தன. இந்த நிலையில் அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
அதில், அனைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். ஆபரேட்டர்கள் தங்களது ஏ.டி.எம்.கள் வழியாக ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வைத்து இருக்க வேண்டும். அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களிலும் 75 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை கட்டாயம் வினியோகிக்க வேண்டும். அடுத்தாண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் அனைத்து ஏ.டி.எம்.களில் 90 சதவீதம் குறைந்தது ஒரு கேசெட்டில் இருந்து ரூ.100 அல்லது ரூ.200 மதிப்புள்ள நோட்டுகளை வினியோகிக்க வேண்டும் " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் வங்கி ஏடிஎம்களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன. அதில் 2 ஆயிரம் ரூபாய் புழக்கத்தில் கிடையாது. அதேபோல் ரூ.100, ரூ.200 கேசெட்டில், அந்த ரூபாய் நோட்டுகளை வைப்பதில்லை. முழுவதுமாக ரூ.500 நோட்டுகள் மட்டுமே வைக்கின்றன வங்கிகள். வங்கிகளின் இந்த செயலுக்கு ரிசர்வ வங்கியின் இந்த உத்தரவு பயனளிக்கும் என்று நம்பலாம்.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications