லோன் எடுக்க நினைப்பவர்களுக்கு ஷாக்.. இனி சிபில் ஸ்கோர் மொத்தமாக மாறப்போகுது.. RBI பெரிய திட்டம்
சென்னை: வங்கிகள் தற்போது இருப்பது போல 15 நாட்களுக்கு ஒருமுறை Cibil Score தகவல்களைச் சமர்ப்பிப்பதற்குப் பதிலாக, இனி வாராந்திர அடிப்படையில் Cibil Scoreஐ கடன் தகவல் நிறுவனங்களுக்கு (CICs) அனுப்ப வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட உள்ளதாம். கடன் வழங்குநர்கள் கடன் அண்டர்ரைட்டிங் செயல்முறைகளில் Cibil Score அறிக்கைகளை அதிகமாக நம்பி வருவதால் இந்த மாற்றம் அவசியமாகிறது.
இந்த நடவடிக்கையின் முக்கிய காரணம், கடன் மோசடி செய்பவர்கள் ஒரு கடன் வாராக்கடனாக மாறியதற்கும், அது CIC-க்கு அறிக்கை செய்யப்படுவதற்கும் இடையிலான காலதாமதத்தைப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுப்பதாகும். அதாவது வாரக்கடன் ரிப்போர்ட் செல்லும் முன் சில அந்த இடைவெளியை பயன்படுத்தி புதிய லோன் எடுக்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில், இந்தத் தகவல் CIC-யில் credit score புதுப்பிக்கப்படாததால், மோசடி செய்பவர்கள் பிற கடன் நிறுவனங்களிடமிருந்து (CIs) கடன் பெறும் வாய்ப்புகள் உள்ளன.

இதை தடுக்கவே இனி வாரம் ஒரு முறை Cibil score ரிப்போர்ட்டுகளை CICக்கு அனுப்ப ஆர்பிஐ உத்தரவிட உள்ளதாம். credit score முறைகேடு நடக்காமல் இருக்க.. மோசடியாளர்கள் கடன் பெறாமல் இருக்க இந்த புதிய முறையை பயன்படுத்த ஆர்பிஐ திட்டமிட்டு உள்ளது.
சிபில் ஸ்கோர் சிக்கல்
ஏற்கனவே நாடு முழுக்க தங்களின் சிபில் ஸ்கோர் குறைந்துவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் புகார் வைக்க தொடங்கி உள்ளனர். முக்கியமாக பர்சனல் லோன் வாங்க போன பலரும் தங்களின் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பதாக வைக்கின்றனர். இதற்கு பின் முக்கிய காரணங்கள் இருக்கலாம்.
கிரெடிட் ஸ்கோரில் செய்யப்பட்ட சில மாற்றங்களே இதற்கு காரணம். ஆர்பிஐ சார்பாக சிபில் ஸ்கோரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. வங்கிகள் உங்களின் சிபில் ஸ்கோரில் கூடுதல் சிரத்தையுடன் இனி செயல்படும். அதாவது முன்பு போல எளிதாக லோன் பெற முடியாது.
மேலும் கிரெடிட் ஸ்கோர் ஒவ்வொரு மாதமும் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்பதால் பலருக்கும் கிரெடிட் ஸ்கோர் யோசிக்க முடியாத காரணங்களுக்காக சரிந்து உள்ளது.
ஆர்பிஐ விதிகள்
புதிய தனிநபர் கடன் விதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இனி தனி நபர் கடன் வாங்குவதை.. அதாவது பர்சனல் லோன் எடுப்பதை இந்த நடவடிக்கை கடினமாக்குகிறது. ஜனவரி 1, 2025 முதல், வங்கிகள் சிபில் ஸ்கோர் அறிக்கைகளை 30 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
சிபில் ஸ்கோர்
முன்பெல்லாம் லோன் வாங்க விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால் கடந்த மாதம் உங்களின் சிபில் ஸ்கோர் எப்படி இருந்தது என்றே பார்ப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் 2 வாரங்களுக்கு முன் உங்கள் சிபில் ஸ்கோர் எப்படி இருந்தது என்று பார்க்க தொடங்கி உள்ளனர். ஆர்பிஐ புதிய விதி ஏற்கனவே வங்கிகளில் அமலுக்கு வந்துவிட்டது.
இதனால் கடந்த 2 வாரங்களுக்கு முன் நீங்கள் உங்கள் பரிவர்த்தனைகள் சிறிய தவறுகளை செய்தால் கூட அதனால் உங்களுக்கு லோன் கிடைக்காமல் போகலாம். அதாவது இனி நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகள், பிழைகள் கூட உங்களுக்கு லோன் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும்.
ஏன் முக்கியம்?
இதன் மூலம் கடன் வழங்குபவர்கள் கடன் வாங்குபவர்களின் நிதிநிலையை நிகழ்நேரத்தில் மதிப்பீடு செய்யலாம். அதாவது துல்லியமாக சிபில் ஸ்கோரை கணக்கிட முடியும். இந்த நடவடிக்கையானது அதிக அந்நியச் செலாவணி மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நடக்கும் முறைகேடுகளை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கடன் வாங்குபவர்கள் இனி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நல்ல கிரெடிட் ஸ்கோரைப் பராமரிக்க வேண்டும். அப்போது மட்டுமே அவர்களுக்கு பர்சனல் லோன் கிடைக்கும். மாத தொடக்கத்தில் ஏதாவது தவறு செய்தால் அது அடுத்த மாதம் உள்ள சிபில் ஸ்கோரில் பிரதிபலிக்கலாம்.. 2 வாரங்களிலேயே பிரதிபலிக்கும்.
.












Click it and Unblock the Notifications