மன்னிச்சிடுங்க.. அம்பேத்கரை அவதூறாக பேசிய விவகாரம்! மீண்டும் மன்னிப்பு கோரினார் ஆர்பிவிஎஸ் மணியன்
சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியன் மீண்டும் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ் மணியன், கடந்த 11ம் தேதி தி.நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாரதியும் விவேகானந்தரும் என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். அப்போது திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் சமூகத்தினர் குறித்து இவர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகாரளித்தார்.

இந்த புகாரையடுத்து மணியன் மீது, பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த மாம்பலம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ள மணியன் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி பால் கனகராஜ் ஆஜராகி ஜாமின் கேட்டு வாதாடி வருகிறார். முன்னதாக கடந்த 22ம் தேதியன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது உடல்நிலை மற்றும் வயதை கருத்தில் கொண்டு அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மணியனின் வழக்கறிஞர் கோரிக்கை வைத்திருந்தார். மேலும் அவர் பேசியதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அவரது பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், பேசியது சரியா? தவறா? உள்நோக்கம் கொண்டதா? இல்லையா என்பது குறித்து தற்போது வாதிட விரும்பவில்லை என்றும் கூறிய வழக்கறிஞர், மணியனுக்கு சிறுநீரகப் பிரச்சினை மயக்க பிரச்சனை உள்ளதால் அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு காவல்துறை சார்பில் ஆஜரான சிட்டி பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ஆர்.தேவராஜ், ஆர்.பி.வி.எஸ் மணியன் அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் உள்ளிட்டோரை அவதூறாக பேசி உள்ளதாகவும், மருத்துவ காரணங்களுக்காக ஜாமில் விட முடியாது என்று ஏற்கனவே இதே நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
சிறை மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் வழங்கப்பட்டு வருவதாகவும், தேவைப்பட்டால் அரசு ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க தயார் என்றும் தெரிவித்தார். ஜாமீனில் வெளியே விட்டால் இது போல் தொடர்ந்து பேசுவார், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றும் அவரை ஜாமீனில் விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
இதே போல புகார்தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்வேந்தன் பத்து முறைக்கு மேல் இதுபோல், பேசிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளதாலும் எனவே இவரை ஜாமீனில் விடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது மணியன் தனது பேச்சுக்காக மீண்டும் மன்னிப்பு கோரினார். இனி இதுபோல பேச மாட்டேன் எனவும் நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார். இதனையடுத்து இவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் 11 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications