தமிழகம் முழுவதும் மினி பஸ்கள் இயக்க மீண்டும் அனுமதி.. வழித்தடம் முதல் வசதி வரை.. முழு விவரம்
சென்னை: பல ஆண்டுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. விரிவான மினி பஸ் திட்டம்-2024 என்ற பெயரில் புதிய வரைவு திட்ட அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதனை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் இன்று பல்வேறு கிராமங்கள் பேருந்து சேவை பெறக்காரணம் கடந்த 1997ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மினி பஸ் சேவைகள் தான். பேருந்துகளே பலவருடங்களாக செல்லாத கிராமங்களில் எல்லாம் மினி பஸ் சேவை காரணமாக 2000களில் பேருந்து சேவையை அனுபவிக்க தொடங்கின. ஆனால் அதன் பிறகு புதிதாக மினி பஸ்கள் இயக்க அனுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை..

சென்னை நகருக்குள் மட்டுமே மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதுவும் மாநகர பேருந்துகள் செல்ல முடியாத வழித்தடங்களை குறிவைத்து மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ புதிதாக புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் மீண்டும் மினி பஸ் சேவைகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024 என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறது. அதற்கான வரைவு அறிக்கையை தமிழக அரசின் உள்துறை வெளியிட்டிருக்கிறது.
அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: "சாலை போக்குவரத்தில் மாற்றியமைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, புதிய மினி பஸ் திட்டம் வரைவு அறிக்கை -2024 தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயக்குவதற்கு அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்த மினி பஸ் சேவை வழித்தடம் வழங்கப்படாது.
அதேவேளையில் சென்னை மாநகராட்சியுடன் 2011-ம் ஆண்டு இணைந்த திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ் சேவை அளிக்கப்பட உள்ளது.
தமிழகம் முழுவதும் எந்ததெந்த வழித்தடங்களில் மினி பஸ்களுக்கான அனுமதியை வழங்கலாம் என்பதனை போக்குவரத்து துறையின் ஆர்.டி.ஓ.க்கள் முடிவு செய்வார்கள். மேலும் ஒரு வழித்தடத்தில் எத்தனை மினி பஸ்களுக்கு அனுமதி தரலாம் என்பதனையும் ஆர்டிஓக்களே முடிவு எடுப்பார்கள். இந்த மினி பஸ்கள் அதிகபட்சமாக 25 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது.
அதில் 18 கிலோ மீட்டர் சேவை இல்லாத வழித்தடமும், 8 கிலோ மீட்டர் சேவையுள்ள வழித்தடத்திலும் இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளது. அதாவது 70-க்கு 30 என்ற வழித்தட முறை பின்பற்றப்படும். ஒரு மினி பஸ்சில், டிரைவர் மற்றும் கண்டக்டர் அல்லாமல் அதிகபட்சமாக 25 பேர் வரை இருக்கை வசதி செய்யலாம். அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும். இந்த மினி பஸ்கள் சேவைகள் மூலம் இனி 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கும் பஸ் சேவை கிடைக்கும்" இவ்வாறு அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு அறிக்கை குறித்து எதிர்வரும் 30 நாட்களுக்குள் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். மேலும் இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் அடுத்த மாதம் 22-ந் தேதி சென்னை கோட்டை 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் நடைபெறுகிறது" இவ்வாறு அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பெரும் தலைகளையே ‘போட்டுப் பார்த்த’ வாக்காளர்கள்.. காமராஜர், அண்ணாவை தோற்கடித்த தேர்தல் வரலாறு! -
ரூ.8,000 கூப்பன் கொடுத்தால் வழக்கு பாயும்.. கறார் காட்டிய தேர்தல் ஆணையம்! அதிரடி உத்தரவு! -
சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்.. இன்றும் நாளையும் 100 டிகிரியை தாண்டும்! உஷார் மக்களே! -
உத்தரப் பிரதேசம் vs தமிழ்நாடு! லோக்சபா தொகுதி மறுவரையறையில் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? ஷாக் தகவல்! -
மயிலாடுதுறை டூ ராமநாதபுரம்.. மழை கொட்டப்போகுது! லிஸ்ட் போட்ட வானிலை மையம்! -
வங்கிகளில் தங்க நகையை அடகு வைத்தவர் தவிர வேறு நபர் மீட்க முடியுமா? விதிமுறைகள் சொல்வது இதுதான்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா












Click it and Unblock the Notifications