ஸ்டாலின் போல வேகமில்லை.. 7 மாசமா ரெடியா இருந்தும் திறக்காத பூந்தமல்லி வடபழனி மெட்ரோ! விஜய் சொதப்பல்

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மெட்ரோ ரயில் சேவை மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. தற்போது நகரின் பல பகுதிகளில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் முதல் பகுதியாக, பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான 14.64 கி.மீ தூர புதிய மெட்ரோ பாதை அனைத்துப் பணிகளும் முடிந்து பயன்பாட்டுக்குத் தயாராக உள்ளது.

ஆனால், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி கிடைத்து சுமார் 7 மாதங்கள் ஆகியும், இந்தப் பாதையில் இன்னும் பொதுமக்கள் பயணம் செய்ய முடியவில்லை. பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கான தேதி இன்னும் முடிவாகாததே இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

metro vijay

அனுமதி கிடைத்தும் திறக்கப்படாத பாதை

பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான இந்த உயர்மட்டப் பாதையில் மொத்தம் 11 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்களை இயக்கிப் பயணிகளை ஏற்றுவதற்கான தற்காலிகப் பாதுகாப்பு அனுமதியை, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கடந்த பிப்ரவரி மாதமே வழங்கினார்.

அதன்பின்னர் அவர்கள் விதித்த சில பாதுகாப்பு நிபந்தனைகளையும் மெட்ரோ நிர்வாகம் (CMRL) முழுமையாகச் சரிசெய்தது. இதையடுத்து, ரயிலின் வேகம் மற்றும் கால இடைவெளியில் சில தளர்வுகளுடன், முழுமையான அனுமதி கடந்த மே மாதமே வழங்கப்பட்டுவிட்டது. இருப்பினும், இந்தத் தடத்தில் இன்னமும் ரயில்கள் சும்மாவே நிற்கின்றன.

பிரதமரின் வருகைக்காகக் காத்திருப்பு

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தின் இந்த முதல் வழித்தடத்தைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து பெரிய விழாவாகத் திறந்து வைக்க வேண்டும் என்று மெட்ரோ நிர்வாகம் விரும்புகிறது. இதற்காகப் பிரதமர் அலுவலகத்தின் (PMO) ஒப்புதலுக்குக் கடிதம் அனுப்பப்பட்டு, தேதி கேட்டு அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

செப்டம்பர் மாதக் கடைசியில் திறப்பு விழா நடக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால், செப்டம்பர் 21 வரை பிரதமரின் வருகை தொடர்பாக எந்த உறுதியான தகவலும் வரவில்லை. இதனால், இந்த விழா அக்டோபர் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று அதிகாரிகள் இப்போது நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பிரதமர் சென்னைக்கு வரும்போது இதர திட்டப் பணிகளுடன் சேர்த்து மெட்ரோவும் திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்தூர் மெட்ரோ திறக்கப்பட்டது; சென்னை மட்டும் தாமதம் ஏன்?

முன்னதாக, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாகப் பிரதமர் ஒரே நேரத்தில் சென்னை மெட்ரோ மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மெட்ரோ ஆகிய இரண்டையும் திறந்து வைப்பார் என்று ஆகஸ்ட் மாதத்தில் பேசப்பட்டது.

ஆனால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இந்தூரில் 11 கி.மீ நீள மெட்ரோ வழித்தடத்தை மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் மாநில முதல்வர் ஆகியோர் செப்டம்பர் 5-ஆம் தேதியே திறந்து வைத்துவிட்டனர். ஆனால், சென்னையில் மட்டும் பாதுகாப்பு அனுமதி கிடைத்தும் இன்னும் ரயில்கள் ஓடவில்லை.

தினசரி பயணிகள் ஏமாற்றம் மற்றும் கேள்வி

பூந்தமல்லி, போரூர், ஐயப்பன்தாங்கல் மற்றும் ஆற்காடு சாலைப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இந்த மெட்ரோ திறக்கப்பட்டால், சுமார் 90 நிமிடங்கள் ஆகும் பயண நேரம் வெறும் 30 நிமிடங்களாகக் குறையும்.

"நாங்கள் தினசரி பைக்கில் அலுவலகம் சென்று நெரிசலில் சிக்கித் தவிக்கிறோம். மெட்ரோ வந்தால் வசதியாக ரயிலில் போகலாம் என்று காத்துக் கிடக்கிறோம். பாதை தயாராகி 7 மாதங்கள் ஆகியும் மக்கள் பயன்பாட்டுக்கு விடாமல் பூட்டி வைத்திருப்பது நியாயமே இல்லை" என்று பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், "பிரதமர் நேரம் ஒதுக்கத் தாமதமானால், மத்திய அமைச்சர்களோ அல்லது மாநில அமைச்சர்களோ முன்னின்று இந்த வழித்தடத்தைத் திறந்து வைத்திருக்கலாமே? தலைவர்களின் வருகைக்காக மக்கள் பயன்பாட்டுக்கான திட்டத்தை மாதக்கணக்கில் முடக்கி வைப்பது ஏன்?" என்ற கேள்வியையும் பொதுமக்களும் பயணிகளும் எழுப்பி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+